பக்கம்:பாலும் பாவையும்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 'நல்ல வேடிக்கை! நானா சூத்திரதாரி?’ என்றான் அவன் வியப்புடன். ஆமாம், அன்றிலிருந்து இன்றுவரை நீதான் அவளை ஆட்டிப்படைக்கிறாய்; கடவுள் ஆட்டிப் படைக்கவில்லை . 'இது என்ன அபத்தம்!-நான் எங்கே அவளை ஆட்டிப் படைக்கிறேன்? அதற்குப் பதிலாக என்னால் இயன்ற உதவியை அல்லவா செய்து வருகிறேன்? ‘பைத்தியக் காரா! அவள் தன்னுடைய வயிற்றுக்கா உன்னிடம் உதவிகோருகிறாள்? வாழ்வுக்கல்லவா உதவி கோருகிறாள’ 'அதற்கு என்னுடைய வறுமை இடங் கொடுத்துத் தொலைந்தால் தானே? 'பொய்; வறுமை நீ வாழ இடங்கொடுக்கும் போது அவள வாழவும் இடங்கொடுக்கும் .' ‘வாழ இடங் கொடுக்காது; சாகத்தான் இடங்கொடுக்கும்' ‘வறுமையின் பெயரால் சாவதற்கு 6 ہدیےhi GI தயாராயிருக்கிறாள்; பெண்களுக்கு மட்டும் பிரத்தியேகமாக வற்புறுத்தப்படும் கற்பின் பெயரால் சாகத்தான் அவள் தயாராயில்லை' 'சமூகம் அவளுடைய விருப்பத்துக்கு விரோதமா யிருக்கிறதே!’ 'சமூகம்!-அப்படி ஒன்று தனியாக இருக்கிறதா, என்ன?உன்னைப் போன்ற கோழைகள் பலர் சேர்ந்ததுதானே சமூகம்?உங்களுடைய சுயநலத்தின் காரணமாக நீங்கள் எத்தனையோ இளம் பெண்களைக் கற்பின் பெயரால் சமூகத்துக்குப் பலி கொடுதது விட்டீர்கள் அதேமாதிரி அவளும் பலியாக வேண்டுமென்று நீ விரும்புகிறாய்! அதை மறைப்பதறகாகக கடவுள் பேரிலும் வறுமையின் பேரிலும் பழியைப் போடுகிறாய்' 'ஐயோ, இது என்ன? அப்படியானால் நான நல்லவன் இல்லையா?