பக்கம்:பாலும் பாவையும்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

459 “அதைத் தான் நானும் சொல் கிறேன்.- கடவுளை உயிரோடிருந்தால் காண முடியாது, செத்துப் போனால் காணமுடியும் என்று அவர்கள் சொல்கிறார்கள் அதைப் பச்சையாகச் சொன்னால் அந்தப் புண்ணியாத்மாக்களுக்கு உலகத்தில் மதிப்பும் இருக்காது, மரியாதையும் இருக்காது. அதற்காக அவர்கள் வாழ்வை மாயை என்கிறார்கள்; சாவை மோட்சம் என்கிறார்கள்!” "நாசமாய்ப் போச்சு; உன்னைப்போல் நாலு பெண்கள் ஊரில் இருந்தால் சாமியார்கள் பிழைத்த மாதிரிதான்!” என்றான் மணிவண்ணன். “யார் அவர்களைப் பிழைக்க வேண்டாம் என்கிறார்கள்? பொய்யும் பித்தலாட்டமும் இல்லாமல் நாணயமாகப் பிழைக்கட்டுமே...!” "நாணய மாகப் பிழை க்க வேண்டு மானால் கஷ்டப்படவேண்டி யிருக்கிறதே!” “அதற்காகக் கஷ்டப்படுகிறவர்களை ஏமாற்றித் தங்கள் வயிற்றை நிரப்பிக்கொள்வதா, என்ன?” "அது அவரவர்களுடைய திறமையைப் பொறுத்த விஷயம் ” என்று மணிவண்ணன் இழுத்தான். “ரொம்ப அழகுதான்! உங்களுக்கு அப்படிப்பட்ட திறமை இருந்தால் நீங்களும் வேண்டுமானால் சாமியாராய்ப் போய்விடுங்களேன்!” என்று அவள் முடித்தாள் அவ்வுளவுதான்; “என்ன சொன்னாய்?-சாமியாராய்ப் போவதா? நானா? உன்னை விட்டுவிட்டா?-ஊஹலம், முடியாது; ஒரு நாளும் முடியாது!” என்று நாடகப் பாணியில் சொல்லிக்கொண்டே, மணிவண்ணன் அவளை நெருங்கினான்; அவள் விலகினாள் இருவரும் சிரித்தார்கள்; அகல்யாவும் அவர்களுடைய சிரிப்பில் கலந்து கொண்டாள் இமமாதிரிப் பேச்சும் சிரிப்புமாக அன்றையப் பொழுது எபபடியோ கழிந்தது மறு நாள் மாலை மணிவண்ணன்