பக்கம்:பாலும் பாவையும்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 அல்ல; செல்வத்தின் செறுக்கு மிக்க அழகுமந்திரவாதியைப்போல நிலைத்த கண் நிலைத்தபடி பார்க்கச் செய்யும் அவளது நீள விழிகளும், கண்டவுடன் ஆசை கொண்டு கிள்ளத் தோன்றும் அவளது குழந்தைக் கன்னங்களும், எந்த நேரமும் இன்பங் காணத்துடிதுடிக்கும் அவளது உதிராத இதழ்களும் கவலையென்பதையே இன்ன தென்று அறியாமல் வளர்ந்த கட்டழகி அவள் என்பதை எடுத்துக் காட்டின. அத்தகைய அழகைக் கண்டு கனகலிங்கம் சும்மா இருந்தாலும் அவனுடைய கண்கள் சும்மா இருக்குமா?-அவை அந்த அழகியின் அழகைத் திருட்டுத்தனமாகப் பருகின-ஆம். அவளுக்கு மட்டுமல்ல; அவனுக்கும் தெரியாமல்தான்! "ஐயா!..இனி.இனி.நீங்கள்தான்.எனக்குத் துணை!” என்றாள் அந்தப் பெண் தட்டுத்தடுமாறிய வண்ணம். கனகலிங்கம் அசந்து போய், "நான்.நான்.நானா...!” என்று குழறினான். "ஆமாம். ஆனால் திடீரென்று நான் இந்த முடிவுக்கு வந்துவிடவில்லை; நீங்கள் இங்கு வந்து சேர்ந்ததிலிருந்து இதுவரை யோசித்துப் பார்த்த பிறகுதான் வந்தேன்-எனக்கு இனி வேறு கதியில்லை; வேறுகதியே இல்லை!" "அப்படியானால் நீங்கள் அழுதது.” “உங்களுடைய கவனத்தை எப்படியாவது கவரவேண்டுமே என்பதற்காகத்தான்!” “அதற்கா இந்த நடிப்பு.?” 'உலகமே நாடகமேடை என்று சொல்லும்போது, அதில் வாழும் நானும் ஒரு நடிகைதானே?” “சரி, உங்கள் கணவர்..?” “என் கணவரா!-இல்லை, காதலர் என்று சொல்லுங்கள்!அவன் நாசமாய்ப் போகட்டும்; அவனைப் பாம் பு பிடுங்கட்டும்; அவன்மேல் மோட்டார்கார் ஏறட்டும்; அவன்