பக்கம்:பாலும் பாவையும்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 “இந்தக் காலத்தில் எங்கே காந்தர்வ மணம் செய்துகொள்வது? கொஞ்ச நாட்கள் இப்படி இருந்து விட்டு, அப்புறம் சென்னைக்குச் சென்று ஒப்பந்தக் கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று இருந்தோம். அதற்குள்.” “என்ன நடந்தது?” "அதைத்தான் இதோ சொல்லப் போகிறேனே. அன்றிரவு நாங்கள் வீட்டை விட்டுக் கிளம்பும்போது ஒரே இருட்டு. அந்த இருட்டுக்கு வெளிச்சமாயிருந்தது. எதிர்காலக் கனவுகள்! அதன் மயக்கத்தில் எங்களை நாங்கள் மறந்து ஒருவரை யொருவர் திரும்பிக்கூடப் பார்க்காமல் மிதந்து சென்றோம். இடையில் ஒரே ஒரு பயம் மட்டும் அடிக்கடி எங்களை எச்சரித்துக் கொண்டிருந்தது. அது, 'நம்மை யாரும் இந்தக் கோலத்தில் பார்த்து விடாமல் இருக்கவேண்டுமே என்ற பயந்தான்!” 'உண்மை! அந்தச் சமயத்தில் மக்கள் ஒருவரைப்பற்றி யொருவர் தெரிந்து கொள்ளாமலிருப்பதே ரொம்ப நல்லது’ என்றுகூட நீங்கள் எண்ணியிருப்பீர்களே?” "ஆமாம்; அதைத்தான் நானும் அப்போது எண்ணி ஆனந்தப்பட்டுக் கொண்டிருந்தேன். ஊரில் ஒரு சிலர் தெரிந்தவர்களாயிருக்கும் போதே ந ம க்கு இவ்வளவு சங்கடமாயிருக்கிறது; உலகத்தில் எல்லோருமே தெரிந்தவர்களா யிருந்து விட்டால் வேறு வினையே வேண்டாம் நல்ல வேளையாக, நான் பயந்ததற்கு ஏற்றாற்போல் அன்று ஒரு சம்பவமும் நிகழவில்லை. மேலும், வழியில் எங்களைக் கண்டு யாரும் சந்தேகப் படாமலிருப்பதற்காக அவன் ஏற்கனவே ஒரு தாலியையும் கொண்டுவந்து என் கழுத்தில் கட்டியிருந்தான்!அப்புறம் கேட்பானேன்? அதுவே புதுமணத் தம்பதிகளைப் போல நாங்கள் நடந்து கொள்வதற்கு லைலென்'ஸ்ாகவும் 'பெர்மிட்டாகவும் இருந்தது. அதன் காரணமாக எந்த விதமான உபத்திரவமும் இன்றி நாங்கள் இருவரும் இங்கே வந்து சேர்ந்தோம். அன்று மாலை இருவரும் தேன் குடித்த