பக்கம்:பாலும் பாவையும்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 உனக்கு எப்படித் தெரிந்தது?’ என்று கேட்டான் கனகலிங்கம். "தாளிடாமல் வைத்திருக்கும் கதவை டொக், டொக் என்று தட்டுகிறீர்களே!-அதிலிருந்தே தெரியவில்லையா, நீங்கள் ரொம்ப ரொம்ப நல்லவர் என்று? 'அறைக் குள் இருப்பவர்கள் எப்படி எப்படியோ இருக்கலாம். அதனால் உள்ளே வருபவர்கள் அவர்களை எச்சரித்து விட்டு வருவது நல்லதல்லவா? "ஆமாம், ஆமாம். வெள்ளைக்காரர்களிடமிருந்து சூட்” அணிவது, சிகரெட் குடிப்பது, லவ்” பண்ணுவது, டைவர்ஸ்’ செய்துகொள்வது, இங்கிலீஷ் படித்து விட்டுத் தமிழைப் பழிப்பது, ஷேக்ஸ்பியரையும் மில்டனையும் கண்டவன்போல் கதையளந்து, கம்பனையும் வள்ளுவனையும் காணாதவன்போல் நடிப்பது-இப்படி அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய 'நல்லபழக்கங்கள் எத்தனையோ இருக்க, நீங்கள் போயும் போயும் கதவைத் தட்டிவிட்டு உள்ளே வரும் 'கெட்ட பழக்கத்தைக் கற்றுக் கொண்டிருக்கிறீர்களே?” 'எனக்கென்னவோ அது ஒன்றுதான் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய நல்ல பழக்கம் என்று தோன்றிற்று: அத்னால் அதைக் கற்றுக் கொண்டேன்-அது சரி: இப்போது காலைச் சிற்றுண்டிக் காக உனக்குக் காசு வேண்டாமா?” என்றான் அவன். 'தேவலையே ஏழையின் மேல் இவ்வளவு தயவாவது வைத்திருக்கிறீர்களே?” என்றாள் அவள் 'காரணம் வேறொன்றும் இல்லை: நானும் உன்னைப்போல ஏ ைழ யா யி ரு ப் பது தான் !” என்றான் கனகலிங்கம். 'நான் பெண்ணாயிருப்பது இல்லையே?-சரி கொடுங்கள்!” என்றாள் அகல்யா சிரித்துக்கொண்டே கோயில் குருக்கள் தீண்டாதானுக்கு விபூதிப் பிரசாதம்