பக்கம்:பாலும் பாவையும்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 'என்ன இரகசியம்...?” 'ஆண்-பெண் இரகசியம்தான்!” "அந்த இழவெடுத்த இரகசியத் தைத்தான் வாழையடி வாழை யாகத் தினசரி எல்லோரும் தங்கள் தங்கள் வாழ்க்கையில்பார்த்துக் கொண்டிருக்கிறார்களே, புத்தகம் வேறு வேண்டுமா?” 'இருந்தால் கொடு: இல்லையென்றால் இல்லை’ என்று சொல்லி விட்டுப் போ யேன்!- வீண் பேச்சு எதற்கு?” என்று விறைப்புடன் சொல்லி விட்டு அந்த வருங்காலத் தலைவர் விடுவிடு வென்று சென்றார். அவர் சென்றதும் தோளின் மீது அணைக் கயிற்றைப் போட்டுக் கொண்டு ஒரு பால்காரன் வந்தான். அவன் எல்லாப் புத் தகங்களையும் ஆவலுடன் எடுத்துப் புரட்டுப் புரட்டென்று புரட்டிப் பார்த்துவிட்டு, ‘இன்னா நைனா எல்லாத்திலும் அச்சுப் போட்டுக்கீதே? வெள்ளையா ஒண்ணுமே இல்லையே?’ என்று கேட்டான். ‘'எதுக்கு நைனா?”என்று திருப்பிக் கேட்டான் கனகலிங்கம். 'பால் கணக்கு எழுத நைனா?!” என்றான் அவன். கனகலிங்கத்துக்கு ஆத்திரம் தாங்கவில்லை. "அடதமிழா, தமிழா!' என்று தன் அடிவயிற்றில் அடித்துக்கொண்டான். 'நீ இங்கிலீசுக்காரனா இருந்தா இரு நைனா, நான் தமிழ னாவே இருந்து ட்டுப் போறேன்!” என்று சொல்லிக்கொண்டே அவன் நடையைக் கட்டினான். அதே சமயத்தில், ...விழா இத்துடன் முடிந்தது; மீண்டும்