பக்கம்:பாலும் பாவையும்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57 ரேடியோக்காரர்கள் ஒலி பரப்புகிறார்களென்றும், அந்த ரேடியோ ஒரு ஸ்லுனுக்குரிய தென்றும் அவனுக்குத் தெரியவந்தது. உடனே தன்னையும் அறியாமல் தன் முகவாய்க் கட்டையைத் தடவிப் பார்த்துக்கொண்டான் அவன். 'காலையில்தான் நேரமில்லை; இப்பொழுதாவது 'ஷேவிங்' செய்துகொண்டு சென்றால் என்ன? என்று தோன்றிற்று அவனுக்கு. ஸ்லுனுக்குள் நுழைந்தான். புத்தகக் கட்டை இறக்கி ஒரு மூலையில் வைத்து விட்டு நாற் காலி யில் உட்கார்ந்தான். ‘ஷேவிங் செய்து முடிந்ததும் அவனுடைய தலையை வாரி விட்டு விட்டு, "ஸ்னோ போடட்டு மா, ஸார்?” என்று கேட்டான் ஸ்லுன்வாலா. ‘'வேண்டாம்; நான் எப்பொழுதுமே ஸ்னோ போட்டுக் கொள்வதில்லை” என்று சொல்லிக்கொண்டே நாற்காலியை விட்டுக் கீழே இறங்கிய கனக லிங்கம், அகல்யாவை நினைத்துக்கொண்டு மீண்டும் உட்கார்ந்தான். 'இன்று மட்டும் "ஸ்னோ போட்டுக் கொண்டு சென்றால் என்ன?-பார்ப்பதற்குக் கொஞ்சம் குளுகுளுவென்று வசீகரமா யிருக்குமல்லவா..? கனகலிங்கம் ஸ்லுன்வாலாவை நோக்கித் திரும்பினான். குறிப்பறிந்து “ஸ்னேப் பாட்டி'லுடன் கனகலிங்கத்தை நெருங்கினான் அவன். என்றுமில்லாத வழக்கம் இன்று மட்டும் என்னத்துக்கு?வேண்டாம், வேண்டவே வேண்டாம். இருக்கிற அழகு இருந்தால் போதும்.' கனகலிங்கம் நாற்காலியை விட்டு மறு படியும் கீழே இறங்கினான்.