பக்கம்:பாலும் பாவையும்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 கனகலிங்கம் முகத்தில் அசடு வழியத் தன்னிடமிருந்த பழைய பத்திரிகைக் கட்டை அவனிடம் கொடுத்துவிட்டு, புத்தகக் கட்டை வாங்கிக் கொண்டு மேலே சென்றான். அப்படிச் செல்லும்போது, மோசம் ரொம்ப மோசம்!ரொம்ப மோசம்! எனக்கு எப்படி இவ்வளவு பலவீனம் ஏற்பட்டதென்று தெரியவில்லையே! என்று தனிக்குள் வியந்து சொல்லிக் கொண்டான் அவன். அது மட்டுமல்ல; அதற்கு ஏதாவது ஒரு மாற்றுக் கண்டுபிடித்தே ஆகவேண்டும் என்றும் தனக்குள் தீர்மானித்துக் கொண்டான் அவன். மாடியை அடைந்ததும், “காந்தி மகானின் கொள்கையை நீங்கள் அப்படியே பின்பற்றுகிறீர்கள் போலிருக்கிறது!’ என்றாள் அகல்யா. அவளுடைய பேச்சோடு அவள் சூடியிருந்த மல்லிகைப் பூவின் மணமும் கலந்து வந்து கனகலிங்கத்தின் மனத்தை மயக் கிற்று.அவன் அந்த மனத்தை விரும்பவுமில்லை; வெறுக்கவுமில்லை. இரண்டுங் கெட்டான் நிலையில், “ஏன் அப்படிச் சொல்கிறாய்?” என்று கேட்டுக்கொண்டே புத்தகக் கட்டைக் கீழே வைத்துவிட்டுத் தன் அறையின் கதவைத் திறந்தான். அதுவரை சுவரில் சாய்ந்தபடி நின்று தன் விழுங்கும் விழிகளால் அவனைக் கவனித்துக் கொண்டிருந்த அகல்யா, "இந்தப் புத்தகக் கட்டை யாராவது ஒரு கூலியின் தலையில் தூக்கி வைக்காமல் நீங்களே துக்கிக்கொண்டு வருகிறீர்களே என்பதற்காகத்தான் சொல்கிறேன்” என்றாள் கேலியாகச் சிரித்துக்கொண்டே, “ஓ, அதுவா?- இருக்கிற ஜாதிகள் போதாதென்று கூலி' என்றொரு தனி ஜாதி'யை உண்டாக்க நான் எப்பொழுதுமே விரும்புவதில்லை-அது தான் விஷயம்.” “ரொம்ப அழகுதான்! அப்படியானால் அந்தக் கூலிகள் எப்படிப் பிழைப்பதாம்.?”