பக்கம்:பாலும் பாவையும்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 "நாசமாய்ப் போச்சு!” என்று அலுத்துக் கொண்டே கனகலிங்கம் தன் அறைக்குச் சென்றான். அகல்யா வழக்கம் போல் அன்று தன் அறைக்குச் செல்லவில்லை கனகலிங்கத்தின் அறைக்குள் அவளும் சிரித்துக் கொண்டே நுழைந்தாள். 'உன்னுடைய அறை இதுவல்ல; பக்கத்தில் இருக்கிறது!” என்றான் அவன். “தெரியும்” என்றாள் அவள். “சரி, நான் வெளியே போய்விடுகிறேன்!” என்று அவன் எழுந்தான். அவள் அதற்கு இடம் கொடுக்கவில்லை; வாயிற்படியின் மேல்தட்டைத் தன் இரு கைகளாலும் பற்றிக் கொண்டு அவனை வழி மறுத்து நின்றாள். “எதற்காக என்னை இப்படி வதைக்கிறாய்?” என்று இரைந்தான் கனகலிங்கம். “உங்களுக்குப் புரியாத விஷயத்தைப் புரிய வைப்பதற்காக!” என்றாள் அகல்யா. "உனக்குப் புரிந்து, எனக்குப் புரியாம லிருக்கும் விஷயம் எதுவும் இருப்பதாகத் தெரிய வில்லையே..?” "இருக்கிறது... !” "இருந்தால் இருந்துவிட்டுப் போகட்டும்; நீ போய்த்துங்கு என்றான் அவன். "தூங்கு கிறேன்: என்னை உங்களுக்குப் பிடிக்கிறதா?” எ ன்று கே ட் டு க் .ெ க | ண் டே அவனுடைய கரத்தைப் பற்றி மெல்ல வருடினாள் அவள். கனகலிங்கத்துக்குத் தர்மசங்கடமாயிருந்தது. இன்னும் இரண்டு