பக்கம்:பாலும் பாவையும்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81 அதனால்?-அனாவசியமாகக் கூட்டம் சேரும்; ஆளுக்கொரு கேள்வியைக் கேட்டுத் திக்கு முக்காட வைப்பார்கள்!அதற்குமேல் கனகலிங்கம் யோசிக்கவில்லை; அவனைத் தொடர்ந்து ஓடினான். ஆனால் ஓயாமல் பெய்துகொண்டிருந்த சித்திரை மாதத்துச் செல்வ மழை, ஹோட்டல் வாசலைக் கடந்து அவனை வெளியே ஒட விடவில்லை. அவன் நின்றான்; நின்றே விட்டான். அந்த ஆசாமியோ காற்றையும் மழையையும் பொருட்படுத்தாமல் ஓடினான், ஓடினான், ஒடிக்கொண்டே இருந்தான்! அவனுடைய தலை மறைந்ததும், 'நமக்கு ஏதோ ஆபத்து நேரப் போகிறது!’ என்று தனக்குள் முணு முணுத்துக்கொண்டே கனகலிங்கம் திரும்பினான். “என்ன!-என்ன நடந்தது?-என்ன!” என்று பரபரப்புடன் கேட்டுக்கொண்டே அவனுக்கு எதிரே வந்தாள் அகல்யா. தன்னைப் போல் அவளும் பயப்பட வேண்டாம் என்று கருதி கனகலிங்கம் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு “ஒன்றுமில்லை; யாரோ ஒரு திருட்டுப் பயல் இங்கே வந்து நின்று நாம் பேசியதை ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந் திருக்கிறான். என்னைக் கண்டதும் ஓடி விட்டான்!” என்றான். "திருட்டுப் பயலா இங்கே திருடுவதற்கு என்ன இருக்கிறது?” என்று கேட்டாள் அகல்யா. "ஏன், நீ இல்லையா?”என்றான் கனகலிங்கம், சிரித்துக் கொண்டே. - “என்னைத்தான் ஏற்கனவே ஒருவன் திருடிக் கொண்டு வந்து இங்கே விட்டுவிட்டுப் போய்விட்டானே!” என்று சொல்லிவிட்டு, அகல்யா நெட்டுயிர்த்தாள். கனகலிங்கத்துக்கு இதைக் கேட்டதும் வேறொரு யோசனை தோன்றிற்று. 'அப்படியானால் எங்கிருந்து திருடிக்கொண்டு வந்தானோ, அங்கே கொண்டு போய் உன்னை நான் விட்டுவிடட்டுமா?” என்றான் அவன்.