பக்கம்:பாலும் பாவையும்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93 “என்ன கனவு...?” 'மாலை நேரம். மலை தன் பயங்கரமான வாயைப் பிளந்து சூரியனைக் கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கிக் கொண்டிருக்கிறது. நான் அந்தக் காட்சியை அனுபவித்த வண்ணம் ஒரு தாமரைக் குளக் கரையில் உட் கார்ந்து கொண்டிருக்கிறேன்.” "இந்திரனை நினைத்துக்கொண்டா?” “இல்லை; உங்களை நினைத்துக்கொண்டு!” “அதாவது, சூரியன்மீது தான் கொண்ட நிறைவேறாத காதலை எண்ணித் தாமரை மலர் நெஞ்சுருகி நிற்பதுபோல நீயும் நின்று கொண்டிருந்தாயாக்கும்?” இதைக் கேட்டதும் அவளுக்கு என்னவோபோல் இருந்தது. ஆத்திரத்துடன்; “நின்று கொண்டிருக்கவில்லை; உட்கார்ந்து கொண்டிருந்தேன்!” என்று சொல் லி -୬| ରJ ବ୪) ର୪t எரித்துவிடுபவள்போல் பார்த்தாள். 'கோபம் வரும் போது கூட நீ அழகாய்த்தான் இருக்கிறாய்!” என்று அவன் சமய மறிந்து அ வ ைள , வர்ணித்தான். உச்சி குளிர்ந்து விட்டது அவளுக்கு. உடனே, "எனக்கு எதிரே ஒரு தாமரை மலர் இருக்கிறது; அதற்குச் சற்று துரத்தில் ஒரு வண்டு உல்லாசமாகப் பாடிகொண்டு வருகிறது” “தாமரை மலரை நோக்கிக் தானே ?” என்று அவன் குறுக்கிட்டுக் கேட்டான். 'இல்லை; கரையோரத்தில் பூத்துக் குலுங்க இரவை நோக்கிக் காத்திருக்கும் பவளமல்லிகையை நோக்கி..” "ஓஹோ - பாவம், தாமரை மலர் அந்த வண்டை எதிர்பார்த்து ஏமாந்துவிட்டதாக்கும் .?” "ஆமாம்-ஆயினும் ஆசை விடவில்லை ஏ வண்டே!