பக்கம்:பாலும் பாவையும்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95 "நிஜமாகவா?-என்ன கனவு க ண் டீ ர் க ள் ? - எ ங் ேக சொல்லுங்கள் பார்க்கலாம்?” என்றாள் அகல்யா, அவனுடைய முக த்தை ஊடுருவிப் பார்த்துக்கொண்டே "சொல் கிறேன் கேள்: மாலை நேரந்தான்! பொழுது ேப ா க வி ல் ைல : கார்ப்பொரேஷன்காரர்கள் கடனுக்காக வைத்திருக்கும் ஒரு பூங்காவுக் குப்போய் நான் புற்ற ரையில் உட் கார்ந்து கொண்டிருக்கிறேன். காலில் ஏதோ அரிப்பது போலிருக்கிறது; எழுந்து பார்க்கிறேன்-ஒரு கம்பளிப் பூச்சி என் வேட்டியில் ஒட்டிக் கொண்டிருக்கிறது!-அது கீழே விழுந்து தொலையட்டுமென்று நான் என்னால் ஆனமட்டும் வேட்டியை உதறி உதறிப் பார்க்கிறேன்- உஹ9ம்; அது விழவேயில்லை?அப்புறம் என்னசெய்வது? அதைக் கையால் தொடுவதற்கும் அருவருப்பாயிருக்கிறது; அங்கிருந்த ஒரு குச்சியை எடுத்து அதைத் தள்ளப் பார்க்கிறேன். அப்பொழுதும் விழவில்லை; ייו குச்சியில் ஒட்டிக்கொண்டுவிடுகிறது...! “என்னைப்போல் என்கிறீர்களா..?” “சீச்சி! கம்பளிப் பூச்சியைப்போலத்தான்?” "அப்படியானால் நான் கம்பளிப் பூச்சியா?” “யார் சொன்னது, நீ கம்பளிப் பூச்சி என்று?” "நீங்கள்தான்!” என்று கையை நீட்டிச் சொல்லி விட்டு, தலையைத் தொங்கவிட்டுக்கொண்டாள். "அப்படியே இருக்கட்டும்; நான் என்ன வண்டா?” "யார் சொன்னது. நீங்கள் வண்டு என்று” 'நீ தான்!” என்று கனக லிங்கமும் கையை நீட்டிச் சொல்லிவிட்டு, அவளைப் போலவே தலையைக் கீழே தொங்கவிட்டுக் கொண்டான்!