பக்கம்:பாலைக்கலி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன்-பாலைக்கலி 11 கொள்ளாதவன். 13. புல்லுவிட்டு - பற்றிப் படர்தலை விடுத்து. இறைஞ்சிய - தாழ்ந்து போன. 14. பிணிபு - அன்பால் பிரியா திருத்தலை பிறழ்தரும் இறந்து போவாள். 15. பணிபு - பணிந்து. பல சூழ்வாய் - போவதற்கு வேண்டுவனவற்றையே எண்ணு கின்றனை. 20. ஆனாது - அமையாது. அருள் வந்தவை - அருள் நிரம்பிய காட்சிகளை 21. மெய் - உண்மை உரைகளை கேளிர் - உறவினர். கானம் செலவு தகைப்ப - காடு போக்கைத் தடுத்து நிறுத்த. 3. போகாதே போகாதே! ("ஒருநாள் கூடும்போது, வழக்கத்திற்கும் மேலாக நின் செயல்கள் பேரன்பு காட்டுவனவா யிருந்தன. அதற்கே, "ஏன் நீ அவ்வாறு செய்தாய்? என்று, அவள் மனம் வருந்தினாள். நின் பால் அவ்வளவு ஈடுபாடு உடைய அவளை நீயும் பிரியலாமோ? அதை அவள் தாங்கிக் கொள்வாளோ?” என்று கூறி, அவன் செலவினைத் தடுத்து நிறுத்த முயல்கிறாள் தோழி) வலி முன்பின், வல்லென்ற யாக்கை, புலி நோக்கின் - சுற்றமை வில்லர், சுரி வளர் பித்தையர், அற்றம் பார்த்து அல்கும் - கடுங்கண் மறவர் தாம் கொள்ளும் பொருள் இலர் ஆயினும், வம்பலர் துள்ளுநர்க் காண்மார் தொடர்ந்து, உயிர் வெளவலின், 5 புள்ளும் வழங்காப் புலம்பு கொள் ஆர் இடை, வெள் வேல் வலத்திர் பொருள் தரல் வேட்கையின், உள்ளினிர் என்பது அறிந்தனள், என் தோழி. 'காழ் விரி கவை ஆரம் மீ வரும் இள முலை போழ்து இடைப்படாஅமல் முயங்கியும் அமையார், என் 10 தாழ் கதுப்பு அணிகுவர், காதலர் மற்று, அவர் சூழ்வதை எவன்கொல்? அறியேன்! என்னும். 'முள் உறழ் முளை எயிற்று அமிழ்து ஊறும் தீ நீரைக் கள்ளினும் மகிழ்செயும் என உரைத்தும் அமையார், என் ஒள் இழை திருத்துவர், காதலர் மற்று, அவர் 15 உள்ளுவது எவன்கொல்? அறியேன்! என்னும். 'நுண் எழில் மாமைச் சுணங்கு அணி ஆகம் தம் கண்ணொடு தொடுத்தென நோக்கியும் அமையார், என் ஒள் நுதல் நீவுவர், காதலர் மற்று, அவர் எண்ணுவது எவன்கொல்? அறியேன்! என்னும். 20 என ஆங்கு, 'கழி பெரு நல்கல் ஒன்று உடைத்து என, என் தோழி அழிவொடு கலங்கிய எவ்வத்தள்; ஒரு நாள், நீர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைக்கலி.pdf/19&oldid=822009" இலிருந்து மீள்விக்கப்பட்டது