பக்கம்:பாலைக்கலி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 கலித்தொகை மூலமும் உரையும் மென் சிறகரால் ஆற்றும், புறவு எனவும் உரைத்தனரே. 'கல் மிசை வேய் வாடக் கனை கதிர் தெறுதலான், துன்னரூஉம் தகையவே காடு' என்றார்; அக் காட்டுள், 15 இன் நிழல் இன்மையான் வருந்திய மடப் பிணைக்குத் தன் நிழலைக் கொடுத்து அளிக்கும், கலை எனவும் உரைத்தனரே. என ஆங்கு - இனை நலம் உடைய கானம் சென்றோர் புனை நலம் வாட்டுநர்அல்லர், மனைவயின் 20 பல்லியும் பாங்கு ஒத்து இசைத்தன; நல் எழில் உண்கணும் ஆடுமால், இடனே. "அற ஒழுக்கத்தை முழுவதும் ஏற்றுத் தவறாது நடப்பது என்பது, மிகமிக அருமையான செயலே. அந்த அருமையான அறநெறியினை உடையவர்களாக உள்ளவர்களே நம்மைத் தேடி வருவர்; நமக்கு அருள் புரிந்து உதவுவர். அவர்களுக்கு ஏற்ற வசதிகளைச் செய்து நாம் உதவ வேண்டாமா? வாழ்வுக்குப் பெரிய பகை வறுமை; அந்த வறுமைப் பெரும்பகையை வெல்வதற்குப் பொருளைத் தேடிச் சேமிக்க வேண்டாமா? தாம் கொண்ட ஆணவத்தால் நம் தகுதியை மதியாது இகழ்ந்து திரிவர் சிலர்; அவரது செருக்கை அழித்தால்தானே நம் வாழ்வு நிலைக்கும்? அதனைச் செய்துமுடிக்க வேண்டாமோ? இவை எல்லாமும் செய்தால்தானே, காதல் வாழ்வில் நிலையான கூட்டமும் இன்பமும் பெற்று, நாம் அமைதியுடன் வாழலாம்? இவ்வாறு பலவும் எல்லாம் எண்ணிப் பிரிந்து, பொருள் தேடச் சென்றவர் நம் காதலர். அவர் வரவேண்டிய நாளும் நெருங்குகின்றது.அவர் தவறாது வந்துவிடுவாரோ?” என்று, தன் தோழியைக் கவலையுடன் கேட்கிறாள் ஒரு தலைவி. கட்டாயம் வருவான்’ என அவளுக்கு ஆறுதல் கூறுகிறாள் அந்தத் தோழி. "விளங்கும் பூண்கள் பலவும் அணிந்துள்ளவளே! அவன் உறுதியாகச் சென்னபடியே, சொன்ன நாள் தவறாது வருவான். எப்படித் துணிந்தேன் என்பாயாயின் கேள்: நான் சொல்வனவற்றை நன்றாகக் கேள்:” "பாதங்கள் தாங்கும் அளவிலே நிலத்தின் வெம்மை இல்லை; நெருப்புக் கங்குகள் போன்று நிலம் வெம்மை கொண்டதாவுள்ளது; அக் காட்டு வழியைக் கடந்து செல்வது மிகக் கடினம்’’ என்று அவன் சொன்னதை நினைந்து நீ வருந்துகின்றாய். கனவிய குழையை உடையவளே! அக் காட்டினுள், துடி போன்ற பாதங்களையுடைய யானைக்கன்று,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைக்கலி.pdf/36&oldid=822027" இலிருந்து மீள்விக்கப்பட்டது