பக்கம்:பாலைக்கலி.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 கலித்தொகை மூலமும் உரையும் s— 'குத்தும் கொம்பானைகள் பேய்த்தேர் நோக்கி ஒடும் நெடிய மலைப்பாங்கான வெம்மைமிகுந்த கானலைக் கடந்து சென்று, நடுநிலைமையோடு முயற்சிசெய்து யான் பொருள் தேடிவரும் அளவும், ஆய்ந்த கோற்றொழிலினையுடைய தொடியினை முன்கையிலே உடையவள், துன்புற்று வாடி வதங்காமல், மனையறம் காத்துப் பேணி நிற்கவும் வல்லமை யுடையாளாவளோ? என்றார். தெரிந்தெடுத்த அணிபூண்பவளே! அவர் உள்ளத்திலே கொண்டிருப்பது அந்த நினைவானால், அவரின்றி நானும் உயிர் வாழ்கின்ற ஆசை இல்லாதவளானால், இனி, அவள் மார்பின் தொய்யிலை நீங்காது கிடந்தவர், இதோ துறந்தார் என்னும் பழி நிலைபெற்று நிற்கும்படியாக, அவர் பிரிவோடு என் உயிரும் பிரிந்து போய்விடும் என்று அவரிடத்தே சென்று இன்னே சொல்வாயாக. விளக்கம்: 'உயிரும் அவரோடு போகும்’ என்பதில், அவரைப் பிரியாது உயிர் அவருடனேயே செல்வதால், இங்குள்ள உடலில் அது தங்கி இராது என்ற நயமும் காண்க சொற்பொருள்: 1. கடுத்தும் - ஐயுற்றும். 6. கோல் - சித்திரத்தொழில் 8, கையாறு இழந்து துயர்உறல்.10.இடுமருப்பு - குத்தும் கொம்பு. தேர் பேய்த்தேர். 14. மதுகை ஆற்றல் 16. நொய்யார் - இழிமகளிர். 24. துளி மாறிய உலகம்! (தலைவியைப் பிரிந்து செல்ல நினைத்த தலைவனைப், பலவாறாகக் கூறித் தடுக்க முயல்கிறாள் அவளுடைய தோழி. முடிவில், மழையற்ற நிலம்போல நின் அருள் அற்ற இவளும் தன் எழிலெல்லாம் கெடுவாள்' என்று கூறி, அவனை எச்சரிக்கிறாள்) வயக்குறு மண்டிலம் வடமொழிப் பெயர் பெற்ற முகத்தவன் மக்களுள் முதியவன் புணர்ப்பினால், 'ஐவர் என்று உலகு ஏத்தும் அரசர்கள் அகத்தரா, கை புனை அரக்கு இல்லைக் கதழ் எரி சூழ்ந்தாங்கு, களி திகழ் கடாஅத்த கடுங் களிறு அகத்தவா, 5 முளி கழை உயர் மலை முற்றிய முழங்கு அழல், ஒள் உரு அரக்கு இல்லை வளிமகன் உடைத்துத் தன் உள்ளத்துக் கிளைகளோடு உயப் போகுவான் போல, எழு உறழ் தடக் கையின் இனம் காக்கும் எழில் வேழம், அழுவம் சூழ், புகை அழல் அதர்பட மிதித்துத் தம் 10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைக்கலி.pdf/64&oldid=822058" இலிருந்து மீள்விக்கப்பட்டது