பக்கம்:பாலைக்கலி.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 - கலித்தொகை மூலமும் உரையும் கொண்டிருக்கும் காஞ்சி, காமனின் தம்பியான சாமனைப் போல நிறம் மாறுபட்டுப் பசலைபாய்ந்து தோன்றும் ஞாழல்; இடபக்கொடியை உடைய சிவனைப் போலச் செம்மையாக விளங்கும் இலவம்; குற்றமற்ற சிறப்பினையுடைய ஐவர்களின் தன்மையைப் போல, இவ்வாறு போதவிழ்ந்து நிறைந்த மரங்களோடு ஆற்றங்கரையின் எம்மருங்கும் விளைவிக்கும் அவ்விளவேனில், எமக்கு மட்டுமே நோவுதரும் தன்மையையுடையதாய் வந்ததுதான் ஏனோ? வென்றி கொண்ட புகழை உலகமெல்லாம் போற்ற, அப் புதிய நாட்டிலே சென்று அவர் வாழ்கின்றார். திறை செலுத்தித் தன் நிழலிலே சேர்ந்தார்க்கு, ஒரு துன்பமும் நேராது காத்து வாழ்வளிப்பவர் அவர். பல வரிகளையும் உடையவான வண்டினங்கள் புதிய பூந்தாதுகளை உண்டு களிக்கும் இவ் இளவேனிலான பருவத்திலே, பழைய அழகெல்லாம் தொலைந்துபோன என் அகன்ற மென்மையான தோள்களையும் அவர் நினைப்பாரோ? விருப்புடன் வந்து தம் நிழலிலே சேர்ந்த பிறரையும் அருளோடு காத்துத், தம் புகழ் உலகம் எங்கும் பரவிப் போற்ற அயல் நாட்டிலே சென்று வாழ்கின்றார் அவர் எத்திசையிலும் தேன் பிலிற்றிக் கொண்டிருக்கும்படியாகத் திருமருத முன்றுறையானது தோன்றும் இந்நாளிலே, குற்றம் அற்ற என் நலம் எல்லாம் வாடுவது எண்ணியும், அவர் வந்து அருள்வாரோ? தாம் பட்ட கேடுகளால் அஞ்சியவராகி வந்து, தம் நிழலிடத்தே சேர்ந்தவற்கு, அவர் மீண்டும் கலங்காதபடி பேணிக் காத்து, முறைமையின்றிப் பொருளை மட்டுமே விரும்பிப் பரந்த அப் பிறர் நாட்டிலே வாழ்பவர் அவர். அழகு பெற்ற எம் நுதல் வேறுபட்டும், ஆற்றல் நிறைந்த பெருவனப்பு இழந்தும் நாம் வருந்துகின்ற இவ்விளவேனிற் காலத்தே, நம் வருத்தம் தீருமாறு, அவரும் வந்து அருள் செய்வாரோ? நீ வருந்தவேண்டாம், தோழி! நீ வாழ்க! உன் காதலர் பொருகின்ற முரண்வலியுடைய யானைமீதேறிப் போரிட்டு எழுந்து, அப்போரிலே மேலான ஆற்றல் காட்டிய வெற்றியும் பெற்றவர் ஆயிற்றே! அவர் வாய் மொழியோடு அதோ அவர் தூதுவன் வந்து, வந்து கொண்டிருக்கின்றார்’ என்று சொல்வதையும் கேளாய்! கருத்து: தன்னிழல் சேர்ந்த பிறர்க்கெல்லாம் உதவிப் புகழ் பெறும் அவன், தன்னளவில் மட்டும் அருளற்றவனாகி வராது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைக்கலி.pdf/68&oldid=822062" இலிருந்து மீள்விக்கப்பட்டது