பக்கம்:பாலைக்கலி.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 கலித்தொகை மூலமும் உரையும் விரிந்து ஆனா மலராயின், விளித்து ஆலும் குயிலாயின், பிரிந்து உள்ளார் அவராயின், பேதுறுஉம் பொழுதாயின், அரும் படர் அவல நோய் ஆற்றுவள் என்னாது 10 வருந்த, நோய் மிகுமாயின் - நுணங்கிறை அளி என்னோ? புதலவை மலராயின், பொங்களின் வண்டாயின், அயலதை அலராயின், அகன்று உள்ளார் அவராயின், மதலை இல் நெஞ்சொடு மதனிலள் என்னாது நுதல் ஊரும் பசப்பாயின் - நுணங்கிறை அளி என்னோ? 15 தோயின அறலாயின், சுரும்பு ஆர்க்கும் சினையாயின், மாவின் தளிராயின், மறந்து உள்ளார் அவராயின், பூ எழில் இழந்த கண் புலம்பு கொண்டு அமையாது பாயல் நோய் மிகுமாயின் - பைந்தொடி அளி என்னோ? என ஆங்கு, 20 ஆயிழாய்! ஆங்கனம் உரையாதி, சேயார்க்கு நாம் தூது மொழிந்தனம் விடல் வேண்டா; நம்மினும் தாம் பிரிந்து உறைதல் ஆற்றலர், பரிந்து எவன் செய்தி - வருகுவர் விரைந்தே? "சுனைப்பூக்களைத் தேடிச் சென்று எதற்காக முயன்று கொய்கின்றீர்கள்? இதோ, சிறந்த மணமலர்களை நாங்களே தருகின்றோம் என்பன போல, வையை ஆற்றின் இருகரைகளிலும் மரக்கிளைகள் தாழ்ந்து, மலர்க்கொத்துக் களுடன் அழகாக விளங்குகின்றன. ஆற்றின் இடையிடையே தோன்றும் செந்நிறமான மணல்மேடுகள், கன்னியர்கள் தம் தலையிலே தலைக்கோலம் சூடிவருவது போன்று காட்சி தருகின்றன. தொய்யில் எழுதிய திருமகளின் மார்பிலே விளங்கும் முத்தாரம் போல, ஆற்றுநீர் அறல்மணலை ஊடறுத்துச் சென்று கொண்டிருக்கின்றது. அந்த இளவேனிற் பொழுதும் வந்தது. மலரெல்லாம் இதழ் விரித்தன. குயில்கள், காதலுடன் தம் இணையைக் கூவுகின்றன. அவர் மட்டும் இவ்வேளையிலே நம்மைப் பிரிந்திருக்கின்றாரே! “காமத்தால் தனித்திருக்கின்ற மகளிரை வருத்தும் பொழுதாயிற்றே இது அதற்கு இவள் வாழாது இறந்து போவாளே?’ என்று நீயும் வருந்துகிறாய். என் நோய் இப்படி அதிகமாகுமானால், அவர் நமக்குச் செய்யும் அருள்தான் யாதோ? - புதர்களிற்கூட மலர்கள் நிறைந்துள்ளன. சோலைகளிலே வண்டினம் சூழ்ந்துள்ளன. நம் நிலை என்ன? அயலவர் அலர் துற்றுகின்றனர். அவரோ, பிரிந்தவர், நம்மை நினைக்கவே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைக்கலி.pdf/72&oldid=822067" இலிருந்து மீள்விக்கப்பட்டது