பக்கம்:பாலைக்கலி.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன்-பாலைக்கலி 71 பகைவரை வென்று திறைகளைப் பெற்றுக் கொண்டு பாய்ந்து வரும் வலிய தேர்மேல் அவர் வீற்றிருந்து வரும் அழகை ஆசை தீர நான் காண்பேனோ? புகைபோலச் சிதறிப் புதர்களைச் சூழ்ந்துள்ளது பணி. பூவின் தேன்போலக் கள்ளை மூடி மறைத்துக்கொண்டிராத முல்லையரும்புகளான வெண் பற்கள், தம்முள் ஒன்றுடனொன்று மோதி அடித்துக்கொள்ளுகின்றன. இவ்வாறு, என்னை முற்றுகையிடும் கடுமையான பணியானது, அவர் வரும் அதுவரை என்னை உயிரோடும் வாழ வைத்திருக்குமோ? யாதோ அறியேனே? விளங்கும் இழைகள் பல உடையவளே! அவ்வாறு ஏன்? எதேதோ சொல்லி வருந்துகின்றாய்?'இவள் வருந்துவள்’ என்று, நாளின் எல்லையை எண்ணிக்கொண்டேயிருப்பவர் அவர் தாம் சொல்லியது பொய்யாகாமல், அதோ நம் ஊரினுள்ளேயே வந்துவிட்டார். கூற்றுப்போன்ற வேற்படையுடன்தானையர் சூழ வருபவரைப் பாராய்! நீண்டு உயர்ந்த கூடல் நகரிலே, அவரை வரவேற்க, நீண்ட கொடிகள் எப்புறத்தும் எழுகின்றன; அதனையும் காண்பாயாக! சொற்பொருள்: 1. கால்பட்டு - சிறுசிறு கால்வாய்களாகி, கலுழ்நெறி - கலக்கம் தெளிந்து. 6. கூர்ந்த நடுங்கிய. 7. கையாறு செயலற்றுப் போதல் 15. கழை - கரும்பு. 16. அதிர்பு - நடுங்கி 19, பூவம்கள் பொதிசெய்யா முகை வெண்பல் - இனிய தேன் உள்ளே பெறுதல் அற்ற அரும்பாகிய வெண்பல். 31. விருந்து செய்வோம் வா! (காதலன் வராததனாற் காதலியானவள் வருந்த, வேனிலாகிய தூதுவன் வந்து அவன் வருகையை உரைக்கின்றான். தோழி அதைக் கூறி, விருந்து செய்வோம், வா’ என்கிறாள்.) எஃகு இடை தொட்ட, கார்க் கவின் பெற்ற ஐம்பால் போல் - மை அற - விளங்கிய, துவர் மணல் - அது அது ஐதாக நெறித்தன்ன அறல் அவிர் நீள் ஐம்பால் அணி நகை இட்ையிட்ட ஈகை அம் கண்ணி போல், பிணி நெகிழ் அலர் வேங்கை விரிந்த பூ நெறி கொள - 5 துணி நீரால்,ாது மதி நாளால், அணி பெற - ஈன்றவள் திதலை போல் ஈர் பெய்யும் தளிரொடும், ஆன்றவர் அடக்கம் போல் அலர்ச் செல்லாச் சினையொடும், வல்லவர் யாழ் போல வண்டு ஆர்க்கம் புதலொடும், நல்லவர் நுடக்கம் போல் நயம் வந்த கொம்பொடும், 10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைக்கலி.pdf/79&oldid=822074" இலிருந்து மீள்விக்கப்பட்டது