பக்கம்:பாலைக்கலி.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன்-பாலைக்கலி 79 சோம்பலே இல்லாதவன் ஒருவன்; அவனிடம் செல்வம் ஏராளமாகச் சேரும் அல்லவா! அதுபோல, மரங்கள் பூத்துக் குலுங்கின. அச்செல்வத்தைச் சோம்பேறிகள் உண்டு திரிவது போல, வண்டினம் தேனுண்டு கிளைகளைச் சுற்றிச் சுற்றி ஆரவாரித்தன. திருமகளின் நிறம் செம்மை; அந்நிறம் போலத் தளிர்களை மரங்கள் ஈன்றன. அவள் மேனியில் சுணங்கு பரந்தது போலத் தாதுகள் அத்தளிர்களின் மேல் உதிர்ந்தன. கருமணி போலத் தெளிந்த தண்ணிரால் நிறைந்த குளங்கள் மலர்ச் சோலைகளிலே விளங்கின. பூவிதழ்கள் உதிர்ந்து கிடக்குந் துறைகளிலே, அவற்றை வாரிச் செல்வதுபோலத் தெளிந்த நீரும் ஒடிக் கொண்டிருந்தது. இப்படியான பலவற்றையும் இளவேனிற் காலத்திலே கண்டாள் ஒரு தலைவி. அவ்வேளையிலே எங்கிருந்தோ குயில் ஒன்றும் கூவிற்று. பிரிந்த தன் காதலனை எண்ணினாள். தன் தனிமையைக் குயில் கண்டு எள்ளி நகையாடுகிறதோ எனவும் நினைத்தாள். நெஞ்சம் வருந்தினாள். அச்சமயத்திலே, அவள் தோழியும் அங்கு வந்தாள். நிலைமையை உணர்ந்த அவள் தலைவிக்குத் தேறுதல் உரைக்கிறாள். "ஏ.டீ நீ அவர் இன்னமும் வராமல் இருக்கிறார் என்றா வருந்துகிறாய், வருந்தாதே" என்று ஆறுதல் சொல்லுகிறாள். தலைவி கூறியன ஒளி தவழும் நுத்லாளே! கேள்: முன்னர் அவர் பிரிந்து செல்லும் வேளையிலே, கண்ணுள் அடங்காத கண்ணிர் பெருகி வழிய நாமும் நின்றேமன்றோ? அப்போது, அதனைப் போக்கிப் பிரியும் போது, நமக்கு அவர், வருவேம்’ என்று உரைத்துச் சென்ற காலத்தையும் நீ அறிவாயே! வையையின் உயர்ந்த மணற்கரையிலே, குளிர்ந்த அருவிநீர் போல நறுமண முல்லைகள் மலர்ந்துள்ளன. அவ்விடத்தே, பலநிற வண்டுகள் ஆரவாரத்துடன் கூடித் தாது உண்டு களிப்பதைப் பார்! ஏனோ, இன்னமும் அவர் மட்டும் வரவில்லை? நீர் மேற்கொள்ளும் செயல் வெற்றி பெறுவதாக என்று வாழ்த்தி வணங்கி, அன்று நாம் அவரை அனுப்பினோமே! அவ்வேளையிலே, அவர், வருவேம்’ என்று சொன்ன காலத்து எல்லையை அறிவாயே! ஒளிவீசும் இழையினையுடையவளே! ஆற்றிடைக் குறையுள், அவர், துணையான என்னுடன் சேர்ந்து, காமன் திருநாளில் மகிழ்வோடு களித்திருக்க வேண்டிய நாளன்றோ இது இருந்தும் அவர் வரவில்லையே?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைக்கலி.pdf/87&oldid=822084" இலிருந்து மீள்விக்கப்பட்டது