பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகுசுந்தரம்/107 நாடகப்பித்து இருந்தது. பள்ளியில் ஆசிரியராகப் பல ஊர்களிலும் இருந்த போது மாணவர்கள் நடிப்பதற்காக நிறைய நாடகங்கள் எழுதியிருக்கிருர். இவர் தமது மக் களான சரசுவதியும் கோபதியும் நடிப்பதற்காக வென்றே கவிதை நாடகம் எழுதியிருக்கிருர். இவர் எழுதியுள்ள 'இரணியன் அல்லது இணையற்ற வீரன்’ என்ற நாடகம் கி.பி. 1948 ஆம் ஆண்டு தமிழக அரசில்ை தடை செய்யப்பட்டது, 5-9-48இல் காஞ்சி சீர்திருத்த நாடக சபையினர், வட ஆர்க்காடு மாவட்டத் தைச் சேர்ந்த திருவத்திபுரத்தில் இத்தடையை மீறி நாட கம் நடத்தினர். அன்று பிற்பகல் காவல் துறையினர் 'இந்நாடகம் தடை செய்யப்பட்டிருக்கிறது; பொது மக் கள் இதனைப் பார்க்கக் கூடாது' என்று தண்டோரா போட்டு விளம்பரம் செய்தனர்.என்ருலும் நாடகம் பார்க்க ஐயாயிரம் பேர் கூடிவிட்டனர். காவல் துறையினர் வேட மிட்டிருந்த நிலையில் அப்படியே நடிகர்களைக் கைது செய் தனா. ஒரு முறை சென்னையில் இந்நாடகத்தை நடத்துவதற் காகப் பாவேந்தர் முயற்சி செய்து வந்தார். புதுவையி லிருந்து பள்ளி விடுமுறை நாட்களில் சென்னை சென்று. ஒத்திகை நடத்திவிட்டு வருவாராம். இவ்வொத்திகை சென்னையில் அண்ணுப்பிள்ளை தெருவில் நடந்தது. அப் போது நாடகத்தில் பங்குபெற்று நடிப்பதற்காகத் திருவா ளர்கள் குருசாமி. திருவாசகமணி, திருமதி சத்தியவாணி முத்து ஆகியோர் பாவேந்தரிடத்தில் பயிற்சி பெற்றன ராம். கி.பி. 1944ஆம் ஆண்டில் பாவேந்தரே சில நண்பர்களின் துணையோடு ஒரு நாடகக் குழுவை அமைத்து 'இன்ப இரவு' என்ற நாடக நிகழ்ச்சியை நடத்தினர். பாவேந் தரின் இயல், இசை, நாடகப் படைப்புகள் அதில் இடம் :திரு. குருசாமி இரணியன்; திருவாசகமணி பிரகலாதன்.