பக்கம்:பிராயச்சித்தம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராயச்சித்தம் 99 இளையவளின் அழகு ப்ரமிக்கத்தக்கதாக இருந்தது. பாலைவனத்து ரோஜா. அவள் அழகை யாரும் பார்க்கப் போவதுமில்லை. அக்கா அவளுக்கு திருஷ்டி கழித்தமாதிரி யிருந்தாள். மூத்தவள் குருக்களைக் கொண்டிருந்தால், தங்கை தாயாரைக் கொண்டிருந்தாளோ? ஆனால் இம் மாதிரி யோசனையால் எனக்கென்ன ப்ரயோசனம்? சாப்பாடு முடிந்து, கையலம்ப அழைக்கடைக்குப் போனபோது கிணற்றடியில் வழுக்கி-பின்னால் சட் டென்று ஒரு கை தாங்கிக் கொண்டிராவிட்டால், ஆசாமி அப்படியே குடை சாய்ந்திருப்பான். "என்னை இங்கிருந்து அழைச்சுண்டு போயிடுங் களேன்!” கிணற்றடியின் கும்மிருட்டில் கன்னத்தைத் தீய்த்த அந்த அனல் மூச்சு, அந்த ரஹஸ்யக் குரலின் அவசரம் 学 家 苓 விருந்தாளிக்குத் திண்ணைமேல் ஒரு பழம் பாயும் ஒரு அழுக்குக்கல் கெட்டித்தலையணையும் வழங்கப் பட்டன. ஆனால் விருந்தாளிக்கு அன்றிரவு பூரா தூக்கம் வர வில்லை மாறி மாறிப் புரண்டான். நாலு இடம் அலை வதன் வினை என்றுமே தூக்கம் தகரார்தான். இல்லா விட்டால் தாக்கமாத்திரை எதற்கு? இன்னும் யார் யாரை இப்படிக் கேட்டிருப்பாள்? ஆனால் இங்கே வருவார் போவார் யார் இருக்கப் போகிறார்கள்? முன்பின் பார்த்துக்கூட இராத ஒருவனிடம் ஒரு வயதுப் பெண்ணுக்கு (ஏன், வயது தாண்டின என்றே