பக்கம்:பிராயச்சித்தம்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராயச்சித்தம் 107 இரு கைகளை நீட்டிக்கொண்டு திருத்துழாய் மார்பனைத் தேடும் ஏக்கத்துக்கும், இந்தப் பக்கமும் அந்தப்பக்கமுமாக ஒடி ஒடி அலைந்து அந்தத் தவிப்புக்கும் இத்தனை சக்தியா? இதற்கு வராத பரந்தாமன் இந்த ப்ரேமைக்கு லாயக்கு தானா? மரகதம் மேடையில் நட்டுவாங்கத்துடன் உட்கார்ந் திருந்தாள். அவள் நெற்றியில் முத்திட்ட வேர்வையில் எத்தனை அழகாயிருந்தாள். இருட்டடிக்கப்பட்ட அரங்கத்தில் பக்கத்து நாற்காலி யிலிருந்து ஒரு கம்மின குரல் தர்மராஜன் பக்கமாகச் சாய்ந்தது. 'ஸார் உங்களைத்தான்-?’’ 'yes?" தேன் போதை இன்னும் முழுக்கத் தெளிய வில்லை. "Exeuse me. நீங்கதானே குமாரியின் ஃபாதர்?’’ “yes?” 'நான் அம்மாவோடு பேசினேன். அவங்க உங்க ளோடு பேசச் சொன்னாங்க-எப்ப சாவகாசமா நம்ம சந்திக்கலாம்? நாளைக் காலையிலே வரலாமா? இல்லே அதைவிட பெட்டர் நீங்க என் ஆபீசுக்கு வந்துடுங்களேன். i am a busy man. GG5It gro visiting card” & 35T orgy கையில் திணிக்கப்பட்டது. "என்ன விசேஷம்?' ஒண்ணுமே புரியவில்லை. 'நான் ஒரு ஃபிலிம் ப்ரொட்யூலர். என்னுடைய latest ப்ரேமரதம் பார்த்திருப்பீங்கன்னு நெனைக்கிறேன். வர வெள்ளி, வெள்ளி விழா கொண்டாடுது, மந்திரி வராரு. அழைப்பு அனுப்பறேன்.'