பக்கம்:பிராயச்சித்தம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராயச்சித்தம் 115 என்ன நேரப்போகிறதோ என்று காத் திருக்கும் நரகம் இல்லை. ஒரு நரகம் போனால் இன்னொன்று. அது தெரியும். ஆனால் இந்த நரகம் இனி கிடையாது. மரகதமே ஒரு தனி கேஸ் போலத் தெரிகிறது. ரத்தத் திலேயே ஒரு கால் ஜீன்ஸ் சமாச்சாரம். கிராமத்தில் கிணற்றடியிலிருந்தே அவள் சமயத்துக்குத்தான் காத்திருந் திருக்கிறாள். அவளுடைய சமயங்களும் அவளுக்குத்தான் தெரியும். என்னோடு அவளுக்குக் கஷ்டம்தான். ஆனால் மது?-No, நான் ஒன்றும் செய்வதற்கு இல்லை. மது இப்போது கேட் கமாட்டாள். மரகதம் என் தவறு. என் வாழ்க்கை முழுக்க என் தவ றுக்கு பிராயச்சித்தம்தான். சரி. இனி நடக்க வேண்டிய து என்ன? கடையைக் கட்டு. சீட்டைக் கலை Fresh Dea1. பழைய கம்பெனிக்குப் போய் பழைய வேலையைக் கேட்டார். இரு கைகளாலும் வரவேற்கப்பட்டார். “Welcome back to the fold Mr. Dharmarajan.” டைரக்டர் காரணம்கூடக் கேட்கவில்லை. ஏற்கனவே தெரியுமோ என்னவோ. இது மாதிரி விஷயங்களில் பாதிக் கப்பட்டவர்களுக்குத்தான் தகவல் கடைசியாக கிடைக் கிறது (சமுதாயத்தின் சதி, விதியின் புரளி!) எப்படி! தன்னை மறக்கும் ஈடுபாடில் தன் வேலையில் முழு வெறியுட ன் தர்மராஜன் இறங்கினார். "நான் ஹீரோக்களின் வார்ப்படத்தில் விழவில்லை’ அவ்வப்போது தனக்குச் சொல்லிக் கொண்டார். அப்படி இருந்தால் என் நிலைமையை, நிலைமைகளை எப்படி நிர்வகித்திருப்பேனா அதுவும் எனக்குத் தெரியாது. நிச்சய மாக, நான் கப்பலின் கேப்டன் அல்ல, கப்பலோடு கடைசி யாக அமிழ்பவன் காப்டன்தானாமே. நான் சர்வ சாதாரணமானவன்.