பக்கம்:பிராயச்சித்தம்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 லா. ச. ராமாமிருதம் கடலில் துள்ளியெழுந்து அதிலேயே விழும் மீன் போல், மூழ்கிப் போன மோனத்திலிருந்து அவ்வப்போது வார்த்தைகள் மனமில்லாது ப்ரஸ்ாதம் போல், காத்திருந் தவர், உணர்ந்தவர் அதிர்ஷ்டம். மோனத் தில் சோதனை நடத்த எத்தனையோ இருக்கு. வெறும் பேச்சை அடக்குவது மட்டும் மோனம் அன்று. இன்னும் என்னவோ இருக்கு. அந்த உலகமே தனி. பார்க்க, கேட்க, ஆசை. பக்கத்தில் போக பயம். ஆனால் பெரியப்பா ஏதோ ஒரு கட்டத்தில் தானிருந் திருக்கிறார். அதில் சந்தேகமில்ைைல. அத்தனை வியாதி கள் படுத்துகையில் ஏதோ ஒன்றின் காரணியாக ரத்து ஆகாமல், உயிரை உடம்புடன் பிடித்து வைத்துக்கொண் டிருந்ததே ஒரு அமானுஷ்ய வித்தைதான். ஒரு நள்ளிரவு பக்கத்தில் தூங்கிக்கொண்டிருப் பவனைத்தட்டி எழுப்பி, தருமு, யாருக்காகவும் யாரும் காத்திருப்பதில் அர்த்தமில்லை. உண்மையில் யாருக்காக வும் யாரும் காத்திருக்கவில்லை. எதற்காக இந்த ஆலசியம் என்று தெரிவதும் இல்லை. ஆகவே யாரும் யாருக்காகவும் காத்திருக்க வேண்டாம்...' காத்திருந்தேன். கைவிரித்தார். 'நீ வந்த வேலையைப் பார்...' 'என் வேலை என்ன பெரியப்பா?’’

  • உன் ப்ரக்ஞை.'

'அப்படியென்றால்?’’ "நீயே கண்டு பிடித்துக்கொள்.' திரும்பிப் படுத்துக்கொண்டு விட்டார்.