பக்கம்:பிராயச்சித்தம்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராயச்சித்தம் 137 'ஏன் கோமதி நான் பண்ணறேனே! எனக்கும் கை துருதுருக்கறது.' (ஆனால் ஏன் இப்படி வெடிக்கிறாள்) “Nothing doing.” 'ஸ்ார்’-அவன்: 'ஒரு நாலு வருஷம் முன்னால் ஒரு நாள் ராத்ரி நீங்கள் எங்கள் வீட்டிற்கு வந்து போனீர் களாம். எனக்கு உங்களை சந்திக்க அதிர்ஷ்டமில்லை. ராத்ரி ஒரு மணிக்கு வந்தேன். உங்கள் சமையலைச் சாப் பிடும் பாக்யம் எனக்குக் கிடைச்சது. ப்ரஸாதம்தான். ஆனால் இன்னும் மறக்கவேயில்லை. மறக்க முடியாது. அன்னிக்குத்தான் ஒரு உ ண் ைம தெரிஞ்சுண்டேன். Good food can be religion.” 'நீங்கள் ஸாருக்கு என்ன வேனுமானாலும் சிப்பக் கட்டு கட்டுங்கள். நான்தான் சமைக்கப் போகிறேன். இஷ்டப்பட்டால் சாப்பிடுங்கோ...' 'இல்லாட்டா போங்கோ அதானே! இந்த ஷரத் எல் லாம் எனக்குக் கட்டுபடியாகும் நிலையிலா இருக்கேன்! போட்டதை சாப்பிடுகிறேன் அம்மா தாயே..." வாஸ்தவம்தான். தேதிதான் மாஸம் பாதி தாண்டி யாச்சோன்னோ...முதல் வாரம் உங்களுக்கு இங்கே வரத் தோனுமா? வந்தால் ப்ரஸாந்த்துக்கு ஏதேனும் வாங்கியா கனுமே!’ "நீ சொல்வது அத்தனையும் சரி, அதுக்கு மேலேயும் சரி. இந்த மாஸம் நெருக்கடி ஜாஸ்தி, நீதான்-உங்கள் பஞ்சப் பாட்டை வேறு எங்கானும் போய்ப் பாடும். ஒயாத பாட்டு. வேலையில் இருக்கேள் இல்லையா?” "அதென்ன அப்படிக் கேட்டுட்டே? என்னவோ தொங் கிண்டிருக்கேனோ பிழைச்சேன்.'