பக்கம்:பிராயச்சித்தம்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 லா. ச. ராமாமிருதம் வேடிக்கையாகயில்லை? மெழுகுவர்த்தியின் திரியை நிமிண்டி சுடரை அனைத்தால் போல், உயிர் பொட் டெனப் போனதோடு சரியா? இல்லை பிரிந்தவுடன் அதை வாங்கிக்கொள்ள ஒரு பாத்திரம் காத்துக் கொண்டிருக் கிறதா? சுடரை அணைத்த பின்னர்தான் எழும் ஊது பத்தியின் மணம்போல், உயிரின் நிஜவாழ்வே சாவுக்குப் பின்தானா? பாத்திரம் என்று ஒன்று காத்திருந்தால் அதில் புகுந்து கொள்வதோ, ஒதுக்குவதோ பாத்திரத்தைத் தேர்ந்து எடுப்பதோ உயிரின் செயலில் இருக்கிறதா? இன்னும் கொஞ்ச நேரத்தில் எல்லாக் கேள்விகளுக்கும் பதிலாக ஒரே பதில் சரியான பதில்தான்-ஒரே பதில் கிடைத்துவிடும். ஆனால் அது என் ப்ரஞையோடு எனக்குக் கிடைக்குமா? சிரிப்புச் சத்தம் கேட்ட மாதிரியிருந்தது. திடுக்கிட்டுத் திரும்பினார். யாரும் காணோம். அலைகள்தாம் சிரிக்கின்றன. யாரும் பாரீர் யாவரும் கேளிர்... மனம் மெளனமாயிற்று. மெளனம் கடினமாயிற்று. வானத்துக்கும் கடலுக்கும் ஒலிக்கும் ஒரு சேதி, தர்ம ராஜன் உயிரை மாய்த்துக்கொள்ளப் போகிறான்:

    • g : bgol – u iff !** தர்மராஜன் திடுக்கிட்டார் அந்த அதட்டவில். அதட்டலைக் காட்டிலும் அதிகாரம், மீற முடியாத அதிகாரம்.

'தர்மராஜன் என்கிற பெயரில் உன்னைத்தான். உன்னை எனும் நீ பேரும் உங்களுடையதுதான். பாதையும் உங்களுடையதுதான். இரண்டுக்கும் முன், பின் தொகுப்