பக்கம்:பிராயச்சித்தம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 லா. ச. ராமாமிருதம் "சமையலில் கலர் வந்துவிட்டால் கூடவே ருசியும் வந்துவிட்ட மாதிரிதான். எல்லாவற்றிலும் பாதிக்குமேல் தோற்றம்தான் மற்றதை நிர்ணயிக்கிறது. எல்லாம் பார்க் கிறதைப் பொறுத்ததுதானே' 'து மாந்து போவதும் அப்படித்தான். உங்கள் விஷயத்தில் அப்படியில்லை என்றால் அதையே பொது ரூலாகப் போட்டுட முடியந்தா? சரி எப்படியும் இந்தப் பரீட் சையில் இன்னிக்கு நான் இறங்கப் போவதில்லை. பின்னால் நேராமலாபோறது? சரி புடலங்காய் பொரிச்சக் குழம்பு, எலுமிச்சம்பழ சஸ்ம்...கூடையில் ஒரு எலுமிச்சம் பழம் பார்த்தேன்... என்ன சொல்றேள் அப்பளம் பொரிச் கடறேன்.' § { - என்ன கோமதி? இதுதான் விம்பிளா? சாப்பிட எனக்கு வயிறு வேண்டாமா? முணுமுணுத்தார், 'ஊசித் தொண்டை, பாம்பு வயிறுன்னு வசனம் சொல்லுவா. ஆனால் உங்கள் விஷயத்தில் ஊசித் தொண்டை, ஊசி வயிறு. ’’ ః "தான் என்ன செய்ய? புன்னகை. 'உங்களை யார் என்ன செய்யச் சொல்றா? கோழிக் குஞ்சுக்கு ink filte; கொண்டு ஊட்டற மாதிரி உங்க ளுக்கும் வலுக்கட்டாயமா செலுத்த வேண்டியதுதான்.' அவள் படு குவியில் இருந்தாள். இத்தாற்போல இலை ப்ராப்ளம். வாழை இலை தையல் இலையெல்லாம் இங்கே பக்கத்தில் எங்கும் கிடைக்காது. ஆனால் அவை உங்களுக்குத் தேவையில்லை. உங்களுக்குப் பர்மனன்டாத் தட்டு ஏற்பாடா இங்கேயே இருக்கு, காட்ரெஜ் அலமாரி யைத் திறந்து, பேருமையுடன் எடுத்து வந்தாள். புத்தம் புதிது இன்னும் ஒரு தடலை டிபனுக்குக்கூட ஆளல்லே-ஆமாம். சத்யமா-விட்டேன்னு நீங்கள் சொல்லமாட்டேள். அதனால் நானே சொல்லிண்டுட.