பக்கம்:பிராயச்சித்தம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i4 லா, ச. ராமாமிருதம் சற்றுக் கோபமாய்த்தானிருந்தது. என் நிலைமை இவள் என்ன கண்டாள்? கொஞ்சமோ நிறையவோ மாதா மாதம் இவள் சம்பளம் வாங்கற மாதிரியா, என்னுடைய அன்றாடங்காய்ச்சிப் பிழைப்பு: " ல்ன கோமதி, சாமியிருக்காரான்னு என்னை கேட்டுவிட்டுப் பிள்ளையாருக்குக் காசு சேர்த்துண் டிருக்கே?' 'ஓ, அதுவா? கொஞ்ச நாளாவே இது மாதிரி விஷயங் களைப் பத்தி யோசனை பண்ணிண்டிருக்கேன் இல்லை, யோசனை, என்னை அறியாமலே, என்னைக் கேட்காமலே தானே தோணிண்டிருக்கு. '

  • C#, come on interesting!’’

'ஸார், நம்முடைய செயல்கள், நம்பிக்கைகள், எல்லாம் உண்மையிலேயே நம்முடையதுதானா? குடும்பம், உறவுக்காராள், பெரியவர்கள், நம் நலனைக் கோருகிறவா என்கிற முறையில் பிறமனுஷாள், மொத்தத் தில சமுதாயம், தலைமுறையாத் தாய்ப்பாலுடன் ஊட்டி ரத்தத்தில்...blood sugar மாதிரி ஊறிப்போன பழக்கங்கள் மயக்கங்கள் போதைகள்தானே! கோமதின்னு, கோமதி கோமதிக்காகவேன்னு அவளுடைய சொந்த இஷ்டங்கள், நிச்சயங்கள்...இவைகளைச் செயலாக்குவது ஒரு பக்கமிருக் கட்டும்...எண்ணமாக முதலில் எ ங் கே வெளியிட முடிகிறது? வாயைத் திறந்தாலே சிலுவை...நமக்குச் சிலுவையேது?... வாசல் கதவில் ஆணியால் அறைஞ்சுட தாளே? அதனால் இந்த ஜன்மேதி ஜன்மப் பழக்கவழக்கப் பிசுக்கிலிருந்து நமக்கு விமோசனமே கிடையாது. அதனால்தான் நான் குங்குமம் இட்டுக் கொள்றேன்.' கழுத்துக்கு மஞ்சள் கயிறைத் தாலியோடு வெளியே இழுத்து அவர் முகத்தெதிரே ஆட்டிச் சிரித்தாள். 'என் குழந்தைக்கு உடம்பு சரியில்லேன்னா, ராமர் படத்துக்கு

ஊதுபத்தியேற்றி வைக்கறேன்; ராமா நீயிருக்க எனக்குப்