பக்கம்:பிராயச்சித்தம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 லா. ச. ராமாமிருதம் மோனமானான். அவர், தொடர்ந்து: 'சிகை அஞ்சு வருஷம், நன்னடத்தை, அந்த விழா, இந்த தினம் லொட்டுலொசுக் கன்று அவ்வப்போது ரத்துக்களில் ஒண்ணரை வருடங் கள் போனாலும் மிச்சம் மூனரைக்குப் பஞ்சம் இல்லை. அவள் உதடுகள் தவித்தன. புருவங்கள் உள்லலியில் நெறிந்தன. அவள் படும் வேதனையில் அதன் தன்மையின் நளினத்தின் அழகில் மிளிர்ந்தாள். தன் அழகின் உள் அழகின் தனி அழகு, கண்ணுக்கும் சட்டெனப் படாத நுண் அழகு. அழகிய இரவு. அழகிய இரவின், அதனினும் அழகிய அமைதி. பூக்கள் இதழகள் அவிழ்ந்தோ அல்ல குவிந்தோ அதனதன் பrன் வெளிப்படும் அல்ல உட்புகும் ரஹஸ் யத்தின் அழகுவேளை. பrமோன கான, கான மோன நேரம். ©Ya5Ꭵ £ ©ᏜᎶf❍ @\}胡リ) 。)弦命}。 சிறை வாழ்க்கை அப்படியொன்றும் மோசமா யில்லை. முதல் வருடம் கல் உடைத்தேன். இரண்டு தடவை மும்முரமாகப் படுத்தேன். அப்புறம் என் வயது, உடல் நிலை, என் நடத்தை, தம்தம் சிபாரிசுகளைச் செய்தன. படிப்படியாக என்பாடுகளின் கடுமை குறைந்து, ஜெயில் சமையல் கட்டில் ஒத்தாசை செய்வது, தோட்டத் துக்கு ஹோஸ் கொண்டு தண்ணிர் பாய்ச்சுவது இப்படி மாறி-அப்புறம் நீ நம்பினால் நம்பு, நம்பாவிட்டால் போ, கடைசிப் பத்து மாதம் ஜெயில் நூலகத்து நிர்வாகத்தைக் கவனித்துக் கொண்டிருந்தேன். உட்கார்ந்த படி, ஆபீஸ் நேரம் மாதிரிதான்-சிரித்தார். 'அதில் என்ன அவ்வளவு சந்தோஷத்துக்கு?" பொருமினாள்.