பக்கம்:பிராயச்சித்தம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 லா. ச. ராமாமிருதம் 'கோமதி தன்னிரக்கத்தைத் தவிர். நீ படித்தவள். புத்திசாலி. விவேகத்தை உன்னால் உபயோகப்படுத்த முடியும் ’’ 'தன்னிரக்கமில்லை ஸார். என் குற்றநெஞ்சு உங்கள் மூலம் நேர்ந்த குற்றத்துக்கு, ஆனால் அதற்கு நீங்கள் பட்ட கஷ்டங்களுக்கு, அடைந்த தண்டனைக்கு நான்தான் காரணம்,' 'அசடே, நீ என்னைத் திருடச் சொன்னாயா? ஒரு விஷயம். நம் செயல்களுக்கு, எண்ணங்கள் எல்லாவற் றிற்கும் உண்மையில் எங்கே காரணம் கண்டுபிடிக்க முடி கிறது? தவடையில் அடிச்சால் பல் போச்சு என்று கிடை யாது. எங்கேயோ அடிச்சால், யாருக்கோ என்னவோ போச்சு என்பதுதான் வாழ்க்கையின் நியதி. புரியாத புதிராக இருப்பதேதான் வாழ்க்கையின் நியதி, அதனா லேயே அதன் நியாயம். பூர்வஜன்ம வினை, பிராரத்த கர்மா என்று புத்தகங்கள் ஏதேதோ சமாதானங்கள் சொல்ல முயல்கின்றன. ஆனால் இதை அனுபவ பூர்வ மாகவோ, அப்படியே முழு நம்பிக்கையுடன் எண்ணம் ஏற்றுக் கொள்ளும்வரை எதற்குமே அர்த்தம் என்று இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் வாழ்க்கை இருக்கும் வரை அதை வாழ்ந்தே ஆக வேண்டும். இந்த உண்மை ஒன்று கான், அதன் கட்டாயத்துடன் புலப்படுகிறது. சக்கரம் அறுக்கக் கபாலம் ஏந்துகிறது என்று கீதை சொல் கிறது. நமக்குத் தெரிந்தவரை யானை சுமக்க நரி முக்கு கிறது. புன்னகை புரிந்தார் 'ஸார் நீங்கள் அங்கே படிச்சதெல்லாம் எனக்கு வேணாம். நான் ஒரு பெண். அத்தனையும் என் மண்டைக்கு அப்பாற்பட்டது.” 'உனக்குச் சொல்லவில்லை; எனக்கே சொல்லிக் கொள்கிறேன் என்று வைத்துக் கொள்ளேன். ஆனால் கவலைப்படாதே. அத்தனையும் குப்பை மேட்டு வைராக் கியம் தான்.'