பக்கம்:பிராயச்சித்தம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 லா. ச. ராமாமிருதம் தடுப்பு விழுந்தாச்சு. லெவல் கிராஸிங் பூட்டு இனி எனக்கும் துணிச்சல் இருக்காது. "எங்கள் கதை...எங்கள் மாதிரி கதை எப்படி அதன் "லாஜிக்'படி போகுமோ அப்படியே போய், ஒருநாள் "டுமீல்." ? & சிரித்தாள். அவர் காத்துக்கொண்டிருந்தார். அவர் மோனம் அவளிடமிருந்து சொல்லைக் கட்டாயப்படுத் தியது. "எப்பவுமே ஸார், கண்ணை மூடிண்டு, நம்மையே ஏமாத்திக்கறோம். அல்லது ஏமாத்திக்கறதா நெனச்சுக்க றோம்.' "ஒஇது பழுத்த வேதாந்தமா? பச்சை வேதாந்தமா?” "இது பட்டயதார்த்தம், வேதாந்தம் ஒரு புரளி.' 'அட, இந்த கிண்டர் கார்ட்டனுக்குள், ஒரு நல்ல, உன்னதமான புருஷ சம்பாஷனைக்கு லாயக் ஆகிக் கொண்டிருக்கிறாயே! என்ன ஆச்சு?’’ "நாம் போனதடவை சந்திச்சப்போ, அதாவது மூணரை வருடங்களுக்கு முன்னால், அதற்கும் முன்னால் ஒன்பது வருட இடை வேளைக்குப்பிறகு அந்த ஒரே ஒரு பிற்பகல்-கோடம்பாக்கத்து ஹைரோடு மேம்பாலத்துக் கடி விட் டில்...சும்மா புள்ளிகளை ஒழுங்காப் போட்டு காலத்தையும் இடத்தையும், வேளையையும் ஸ்திரப் படுத் திக்கறேன். வேறொண்ணுமில்லை. அப்பவே என் கதையை உங்களிடம் முழு க் க ச் சொல்லவில்லை, மறைச்சுட்டேன் "' "எல்லாருக்கும் உள்ளதுதானே! இப்போதுகூட கோமதி, உனக்குச் சங்கோஜமாக இருந்தால்...”* "இப்படித் தட்டிக் கழிச்சுட்டு நீங்கள் கழட்டிக்கப் பார்க்கறேளா? ஆனால் உங்களைக் குறை சொன்னால்