பக்கம்:பிராயச்சித்தம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராயச்சித்தம் 41 "எங்கே விட்டேன்? ஆ, ஆமா, நல்லவேளை, நகை யெல்லாம் பாங்கிலே பெட்டகத்துவே பத்தரமாயிடுச்சோ புளைச்சுது. அன்னிக் கடைவியாபாரம் வசூல் ரொக்கமா கிட்டக்கிட்ட அஞ்சாயிரம்போல, இரும்புப் பெட்டியிலே. பெட்டி படுக்கை அறையிலே இருந்திருச்சோ புளைச்சது. படுக்கை அறையிலே எப்பவுமே உள்ளே தாளிட்டுத் தான் படுப்பேன். பெட்டி அடியிலே நாயாட்டம் காவலாப் படுத்தே பளக்கம். இதுலெல்லாம் நான் சாதாரணமா தன்மையிலேயே உஜாருங்க. கூடத்துலே குளிர் சாதனப் பெட்டி அதைப் பூட்டல்லே. அதைப் பூட்டறதில்லியாமே! உள்ளேயே லைட்டு போட்டு மின்சாரம் சத்தம் போட்டு ஒடிக்கிட்டிருக்குது. 'காலையிலே எளுந்திருச்சுப் பாத்தா, அதுலே நாலு முட்டை, ரெட்டு சாத்துக்கொடி வெச்சிருந்தேன். அதுவும் பூண்டு ஊறுகாய்ப் புட்டியும் காணல்லே. எங்க அய்யா வுக்கு பூண்டு ஊறுகாய்ன்னா விசேஷ பிரியமுங்க. வந்த, வனுக்கு மனது எப்படியிருக்கும்? ஆச்சி சிரிக்கவில்லை. 'ராப் பத்துப் பாத் திரமெல்லாம் சமையலறை லேயே கிடத்திருச்சோ புளைச்சது. நான் தேகசிரமத் துக்குப் பால்மாறதில்லை. படுக்கப் போற முன்னாடி, எல்லா அறையும் பூட்டி, சாவிக் கொத்துத் துங்கறப்போ கூட இடுப்புலேதான் தன்மையிலேயே உஜாருன்னு அந்த நாளிலேயே என்னைச் சொல்லுவா; அடி செண்பகத் தாச்சி, யமன் கூட உன் உயிருக்கு, உனக்குக் கணக்குச் சொல்லிட்டு வாங்கணும், எடுத்துட்டுப் போக முடியாது டி ன்னு! "ஆனால் நான் சத்யவான் சாவித்திரியா? ஐயா உசிரைக் கண்ணெதிரே தட்டிக்கிட்டுப் போயிட்டானே. -ஏண்டா விசுவம், என்னாத்தே தேடிக்கிட்டு அந்த ஐயா