பக்கம்:பிராயச்சித்தம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 லா. ச. ராமாமிருதம் என்ன? அங்கே நீங்க இருந்துக்கிடலாம். மாடி அறை மாதிரி ஆவாது. அங்கே ஆள் இருக்கு. தவிர அந்த குடக் கூலி இப்போ உங்களுக்குக் கட்டாது. உள்ளதைச் சொல்லணுமல்ல! இன்னொனுகூட சொல்வேன்'தயங்கினாள். காத்திருந்தார். 'கடையாளுங்களுக்கெல்லாம் நம்ம வீட்டிலேதான் சாப்பாடு. அவங்களுக்குத் தனி சமையலே நடக்கு. காலை யிலே நாஸ்தா. மதியம் குளம்பு, பொரியல். ராவுலே பலகாரம் எங்க நாட்டுப் பழக்கம். அந்தப் பந்தியிலே நீங்க சேர்ந்துக்கலாம். ஆனால் சேருன்னு நான் என் வாயாலே எப்பிடிச் சொல்றதுங்க? சேதிதான் தெரிவிக்க லாம். அந்த சமையல் ஐயாவுக்கு ஒத்துக்குமா வேறு இருக்கு காரம் கூடுதலாயிருக்கும். மோர், தயிர், நெய் இல்லாமல் உங்களால் இருக்க முடியுமா? வாரத்துலே ரெண்டு நாள் அசைவம் இருக்கும். ஆனால் அன்னிக்கு நம்ம வீட்டிலே சாப்பிட்டுக்கலாம் வெச்சுக்கங்க..." "அப்புறம் வந்து பார்க்கிறேன்' என்று எழுந்தார். ஆச்சி எழுந்து நிற்கவில்லை. "ஐயா. உங்கள் பொருள் எல்லாம் அன்னிக்குப் போலிஸ் வாரியிறைச்சுட்டுப் போனாஹளே. உங்க பெட்டியிலே அடைச்சு, கடையில் கொண்டுவந்து வெச்சிருக்கு. எடுத்துப் போlங்களா? இங்கேயும் நாலு பேர் நடமாடற இடம். நாளுக்கு நாள் நாடே கெட்டுப் போச்சு. ஏ சாமிவேலு!' சாமிவேல் உள்ளே போய் எடுத்து வந்தான். வாங்கிக் கொண்டார். 'சரி அப்புறம் பார்ப்போம்

  • 翠 燃 ,