பக்கம்:பிராயச்சித்தம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 s பிராயச்சித்தம் அம்மா! உள்ளே கால் கட்டைவிரல் நுனியில் அலை கிளம்புவது தெரிந்தது. சுருண்டு கொண்டே மேல் ஏறி, மார்பின் அகலத்துக்கு அங்கே உள்விரிந்து, தொனடையை அடைத்து மேலும் மேனோக்கிய அதன் இரக்கமற்ற பாதையில் நெற்றியில் புருவ மத்திக்குத் திடீரெனக் குறுகி: அந்தப் புனல் குழாயுள் புகுந்து தடைப்பட்ட முழுவேகத் துடன் நெற்றி விசாலத்துக்குக் குழுமி மூளையுள் மோதி விரிந்ததும்- - கண் இருண்டது. துணைப் பிடித்துக் கொண்டார். மழை வெள்ளத்தில் பிடிபடாத தறியாய் சுயநினைவு தடுமாறிற்று. ஒரே பலஹlனம். வயது கவிழ்க்கிறது. அந்த உள் அந்தியில் ஏற்றிய திரிகளில் எழுதிய ஒரு சொல் புருவ நடுவினின்று புறப்பட்டு உள் கண்ணுக்கெதிர் கற்பூர ஹாரத்தியாய் வட்டமிட்டது. அஸ்து! அஸ்து!! அஸ்து!!! நன்று! நன்று!! நன்று!!! யாவும் நன்றே என்று, என்றும் எப்போதும் நன்றி செலுத்திக் கொண்டே யிரு! அஸ்தி! அஸ்தி!! அஸ்தி!!! அஸ்தியிலிருந்துதான் அஸ்து. தேற்று ஒரு மாதிரி. இன்று இன்னொரு மாதிரி. அதுவேதான் ஆனால் வேறுமாதிரி? நேற்றாவது, இன்றாவது! "யாரு? பார்த்தமாதிரி யிருக்கே! தர்மராஜனா! இல்லே யாரையேனும் தப்பாநெனச்சுண்டு உளச்றேனா?" 'மணி! எப்படியிருக்கே?