பக்கம்:பிராயச்சித்தம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராயச்சித்தம் 61

    • ஆமாம் அவள் அளக்கற படிக்கு ரெண்டாவது ஸ்னானம் வேறேயாக்கும். ஒண்னு ஞாபகம் வெச்சக்கோ தருமு. இவள் மத்தவாளுக்குத்தான் தெய்வம், சாமி அம்பாள். நமக்கு இவள் வயிற்றுப் பிழைப்பு. சரி நான் சொல்றதைக் கேளு. சொக்கா பணியனைக் கழட்டி வை. "இமம்மே வருண சொல்வி ப்ரோதோனம் பண்ணிக்கோ எதேஷ்டம் உனக்கு சரிப்படல்லேன்னா, வாசல்லேயே கிணறு. இழுத்துக் கொட்டிக்கோ. இடுப்புத் துணியை நனைச்சு நன்னாப் பிழிஞ்சு ஏழு தடவை உதறிட்டால், மடிவந்துடறதுன்னு சாஸ்திரமே சொல்றது. விபூதியைக் குழைச்சுப் பட்டையா நெற்றியில் போடு. உனக்கோ தேஜஸ் எப்படியோ வந்துடறது. போன தடவையே கவனிச்சேன், இன்னும் என்ன வேணும் வரவா நேரம் ஆச்சு. இன்னிக்கு ஒரு அபிஷேகம் ஸஹஸ்ரநாமம் இருக்கு. பிள்ளை மஞ்சள் காமாலையிலிருந்து மீண்டானாம், அவன் நக்ஷத்ரம் இன்னிக்கு. நைவேத்யம், பெண்ணரசி இன்னும் கொஞ்ச நாழியிலே கொண்டு வந்துடுவாசொல்லிண்டேயிருக்கேன் வந்துட்டாளே! ஏடி குட்டி, இந்த மாமாவைப் பார்த்த ஞாபகம் இருக்கா? எப்பலோ வந்தார். மறுபடியும் இப்பத்தான் வந்திருக்கார். '

'மாமா இல்லே. பெரியப்பா.”* மணி உண்மையிலேயே ஆச்சரியப்பட்டுப் போனான். 'அட, தர்மராஜா, பார்த்தியா? 'குற்றவாளியை’ப் பார்த்தவா, அடையாளம் சொல்ல, போலீஸ் பாரேட்" நடத்துமாமே! பேசாமே குட்டியை அங்கே சம்பளத்துக்கே வெச்சுட வேண்டியதுதான். என்ன ஞாப க ச க் தி பார்த்தியா? கொஞ்சம் சிபாரிசு பண்னேன்... - குட்டி கண்களில், கணக்குடன் பெரியப்பாவைப் பார்த்தாள். 'போன தடவை நமஸ்காரம் பண்ணினப்போ அஞ்சு. ரூவாக் கொடுத்தார்.'