பக்கம்:பிராயச்சித்தம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராயச்சித்தம் 65 வாயிலிருந்து, இதுவரை அவைகளின் அர்த்தித்தில் கவனமிலாத மந்திரங்கள், தாமே உச்சரிப்பில் புறப்படு கின்றன. நெஞ்சடியில், பழக்கமில்லாமல், புதைந்து போன மந்திரங்கள்; அவள் தனக்குத் தொடுக்கும் புஷ்பங்களாக வரவழைத்துக் கொள்கிறாள். எண்ணெயைக் கையில் எடுத்து அவள் அங்கங்களில் அப்புகையில் மனம் அஞ்சு கிறது, கூடவே பரவசமுறுகிறது. அம்மா, இது எனக்குப் பழக்கப்படாத அனுபவம், தப்பில்லாமல் செய்யவேண்டுமென்று சிரமப்படுகிறேன். என் சிரமம் பார்த்தேனும் என்னை மன்னித்துக்கொள். இத்தனை நெருக்கத்தில் உன் முகம் எனக்குக் கண் கூசு கிறது. பெரியப்பா, எனக்குத் துணையிருங்கள். உங்கள் கைகளை எனக்குக் கொடுங்கள். அவள் புன்னகை புரிகிறாள். எண்ணெய்க் காப்பில் மேனி பளபளக்கிறாள். உச்சரிக்கும் மந்திரங்கள் எனக்குக் கவசம். புலிக்குட்டியின் அழகையும், ஆபத்கரத்தையும், குரூரத் தையும் ஒருங்கில் படைத்த தேவியே உனக்கு அஞ்சலி. பின்னாலேயே, முன் உருவின் நிழலாய், நிழல் காட்டும், உன் தாய்மைக்கும், கண்களில் ஒழுகும் பொறுமைக்கும் கருணைக்கும் அஞ்சலி, உன்னில் எல்லாமே சத்தியம். இங்கு பொய்யின் மூச்சுக்கூடப் புக முடியாது. ஆகையால், கமலாம்பிகே, நீயே புலி, நீயே பூமி. நீயே மாதா. - ஒவ்வொரு அபிஷேகத்துக்கும் தண்ணிரை வீசி இரைத்து, முன் சுவடுகள் கலை(ரை)ந்த பின்னர் அடுத்த அபிஷேகம்-சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பால், தயிர்-ஒவ்வொரு ஸ்ணானத்திலும், உருவம் ஒரு புது பரிணாமத்தில் பிதுங்குவது போல், கிட்ட வருவது போல ஒரு ப்ரமை ஏற்படுகிறது. பி.-5