பக்கம்:பிராயச்சித்தம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராயச்சித்தம் 73 கொண்டாளோ? அப்படி ஒரு சைகை காட்டாமல், கல் தன் கடினம் உருகி அந்த மூக்குக்கு அந்தத் தவப் பிஞ்சும் அப்படி ஒரு ம்ருதுவும் எப்படி வர முடியும்? தன் கலையுடன் ஐக்யம் மட்டும் போதாதென தெரி கிறது. கூடவே ஒரு தற்செயல் அகஸ்மாத், புண்யம், அதிர்ஷ்டம், அந்தர்யாமம்...கொடுப்பனை இல்லாவிடில் அந்த அதரங்களின் லேசான இளகலுக்கேற்பக் கன்னக் குழிவுகள் எண்ணைக் காப்பிடும் விரல்களுக்கு உணர முடி கிறதே. சிற்பியின் கற்பனையின் சத்யத்தில் அவன் முகம் அவனுக்கு ப்ரத்யகrமாகியிருக்கும். கொடுத்துவைத்தவன். நானும் இருக்கிறேன். ஏன் இருக்கிறேன்? இதுவும் ஒரு ஜென்மமா? தொண்டையை அடைத்தது. இருப்புக் கொள்ளவில்லை. எழுந்து குறுக்கும் நெடுக்குமாக்-அறை யில் உலாவத் தலைப்பட்டார். அறைக்கு வெளியே கூடத்தின் இருளில் அவருடையத் தவிப்பு இன்னதென்று புரியாமல், தானும் தாய்மையின் தன்மையில் தவித்துக்கொண்டு அவரைக் கவனித்தபடி... வேறு என்னதான் செய்ய முடிகிறது? 率 චූ 伞 அவளுடைய அத்தனை அழகுக்கு என்னால் முடிந்தது. என்ன? தரிசனம் என்று தனியாக ஒன்று புலன்வழி காண முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. மனதிற்கு சும்மாயிருக்கும் நேரமே கிடையாது. சும்மாவே இருக்க முடியாது. ஏதேனும் சித்திரங்கள் வரைந்தபடி இருக் கிறது. பல தடச்சித்திரங்கள், ஞாபகச் சித்திரம், கற்பனை சித்திரம், சொல் சித்திரம், சம்பவச் சித்திரங்கள், எண்ணக் கோலங்கள், உருவங்கள், உருவகங்கள். அருவங்கள், அருவகங்கள், வடிவங்கள், குழப்பங்கள், குளறுபடிகள், தெளிவுகள், ஆனால் யாவும் சித்திரங்கள், எண்ணங்களே சித்திரங்கள்தான்.