பக்கம்:பிராயச்சித்தம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 லா. ச. ராமாமிருதம் லெட்ஜர், பாஸ் புக், கிளியரிங், கத்தை கத்தையாக காசோலைகள், பக்கம் பக்கமாய்க் கூட்டல், டைப்பிங், டெஸ்பேட்ச், பாலன்ஸிங், வங்கிவேலை மாற்றி மாற்றி வேறென்ன சக்கை பிழியறது, யூனியன், வேலை நிறுத்தம், உரிமைகள், முதலாளித்துவம், பாட்டாளி என்று பல்லவி பாடிக்கொண்டு, நிதிகளை விழுங்கிக் கொண்டு வேலைசெய்யாமல் கடிகாரமுள்ளைப் பார்த்துக் கொண்டு, காலத்தை ஒட்டும் கழுப்புணிகள் இருந்தாலும், கூடவே பிள்ளை குட்டிக் கவலை, மானம், லட்சியம், உப்புணர்வு, மனசாட்சி என்ற டமாரம் அடிக்காவிட்டா லும், தலையில் அடித்துக் கொண்டேனும் வேலை செய் பவர், அந்தப் பட்டாளம் வரவர சிறுத்துக்கொண்டே போனாலும் இப்போதைக்கு இருக்கத்தானே இருக்கு. கழுப்புணிகள் வேலை சுமையும் அவர்கள் தலையில்தானே சேர்ந்து விழுகிறது. இந்த அவலத்தை நினைத்துப் பார்த் தால் ஒரு ஒரு சமயம் என்ன அருவறுப்பாய் இருக்கு தெரியுமா! வேலையை விட்டுவிடலாம் என்று தோணறது. ஆனால் இந்த சம்பளம் வேறு எங்கே கிடைக்கும்? நாம் வேறு எந்த வேலைக்கு லாயக்கு? நமக்குப் பொதுமக்களின் அனுதாபமும் கிடையாது. நமக்கு சுயமரியாதையும் கிடை யாது. இந்த நிலையில் எதில்தான் செமத்துஇருக்கும். ஆனால் ப்ரசாந்த் இருக்கிறானே! ப்ரசாந்த் நினைப்பு வந்துவிட்டதும் நடை தானே விரைந்தது. கொஞ்ச நாளாய் ப்ரசாந்த், ஒரு நாய்க்குட்டி சினேகம் பிடிச்சிண்டிருக்கான். அதன் கழு த் தி ல் ஏற்கெனவே கட்டியிருந்த ஒரு ரிப்பனைப் பிடிச்சு வீட்டுக்கு இழுத்துண்டு வந்துட்டான். தானே அதைக் குளிப்பாட்டறதும், சோறு ஊட்டறதும், மடியில் வெக்சுக் கொஞ்சறதும், காதைப் பிடிச்சுத் துரக்கி அதன் கத்தலோடு தானும் கத்தறதும்-வேணதரம் சொல்லியாச்சு திட்டி யாச்சு அடிச்சும் ஆச்சு-ஊஹாம். அவள் ஜம்பம் சாயல்லே.