பக்கம்:பிராயச்சித்தம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராயச்சித்தம் 85 P.C. 333 பக்கத்தில் வந்து நின்றான். இன்ஸ்பெக்டர் தனக் குள்ளே பேசிக்கொண்டார். 'மனிதனுக்குள் நடப்பது Legal struggleêgéž 5mu –tą. Gyü moral sturggie...” P.C 333 காதண்டை குனிந்து வால் ஒட்டவா? இன்ஸ்பெக்டர் தலை நிமிர்ந்தார். அவர் முகத்தில் ஐந்து வருடங்கள் கூடியிருந்தன. வேணாம் ஆளைவிடு, என்னை விடு. ’’ ※ 岑 球 ஓயாத நமு நமுப்பு ஒன்று இருந்தாலும், மொத்தத் தில் ஸார் வந்ததிலிருந்து வெகுநாளாகக் காணாமல் போன மனதுக்கு ஒரு மெத்துத்தான். நாளை உடைமீது மின் சலவைப் பெட்டியை ஒட்டியவண்ணம் கோமதி அந்த உணர்வின் சுகத்தை அனுபவித்துக்கொண் டிருந்தாள். நடையில் சாய்வு நாற்காலியில் (வீட்டுக்கு ஒன்று வாங்கியாகி விட்டது) அமர்ந்திருந்த அவர்மீது அவ்வப்போது அவள் பார்வை சென்று மீண்டது. போனது போக மிச்சம் என் வாழ்க்கையில் இனிமே லானும் நிம்மதியிருக்குமா? வீட்டுக்கு ஒரு ஸ்திரீ லஷ்மி கரம் என்றால் ஆண்பிள்ளையும்-பெரியவரோ சின்ன வனோ தேவைதான். தேடும் அமைதியும் தைரியமும் அப் போத்தான் கிடைக்கிறது. ஆமாம். எனக்கென்று ஏதோ ஒண்ணு பண் ணித் தின்னாலும் அதில் சுவாரஸ்யமில்லை. ஆனால் இப்போ அப்படி இல்லை. அவருக்குப் பசிக்குமே, அவரைத் தனியாக விட்டுவிட்டு வந்தேனே அவருக்காக... என்கிற நினைப்பில் வீட்டுக்கு விரைகையில், அந்த கவலை யில் ஒரு சந்தோஷம் இருக்கத்தான் செய்கிறது. குறிக் கோள் இல்லாத வாழ்க்கை என்ன வாழ்க்கை: ப்ரஸாந்த் தான் இருக்கானே என்றாலும், குழந்தையோடு ஒரு பெரியவாளும் என்றால் அதில் தனி பாக்யம்தான்.