பக்கம்:பிராயச்சித்தம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராயச்சித்தம் 89 ‘'வேண்டாம் ஸார் வேண்டாம். வேண்டவே வேண்டாம். நான் தெரித்துகொள்ள ஆசைப்படவே யில்லை. அவள் கெஞ்சலில் மூர்க்கம் ஒலித்தது.

  • ஆம். அதுவும் சரிதான். அந்தச் சிக்கல் உனக்கு எதுக்கு? ஆனால் உன் நகை? உனக்கு வேண்டாமா?"

‘'எதுவும் வேண்டாம்!'" அவளுடைய பயத்தில் சற்று உரக்கவே கத்திவிட்டது பிறகு உடனேயே தெரிந்தது. 'சொன்னேனே அன்றி அதுவும் சுலபமாக எடுக்கும் படியில்லை.” சில வினாடிகளுக்குப்பின் தன்னை அழுத்தும் யோச னையிலிருந்து சிரமத்துடன் விடுவிடுத்துக் கொண்டு. தொடர்ந்தார். ‘'இப்போது ஏன், சிறையிலிருந்த போதும் கூடத் தான்-திரும்பிப் பார்க்கையில், திட்டம் போட்ட இந்த அசட்டுத் துணிச்சல் எனக்கு எப்படி வந்தது? இன்னமும் திகைப்பாகவும், திகிலாகவும் கூட இருக்கிறது. என்னதான் புத்தியோடும், ஜாக்கிரதையாகவும் இருந்தாலும், ஏன், எப்படி ஏமாந்து போகிறோம்? இது என்ன, அவன் ஒருவன் இருக்கிறான் என்பதற்கு இப்படி ஒரு. அத்தாட்சியா? சரி அப்படி என் துணிகரமான செயலி னாலும் நிலைமை மாறவில்லையே! நீ பட்ட கடன் தீராமல் அப்படியே இருக்கிறது. நகையும் உன்னிடம் சேர்ந்தபாடில்லை. நீ வட்டியேனும் கட்டிக் கொண்டிருக் கிறாயா?” 'வட்டியாவது மண்ணாங்கட்டியாவது, கடனே காலாவதி ஆகிவிட்டது. நகையிருந்தால், வட்டியும் முதலும் சேர்ந்து இப்போ மூழ்கிப் போனாலும் போயிருக் கலாம்: '