பக்கம்:பிள்ளை வரம்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*

4 6 இல் ရွှံ့ ឍ ប៉ நான் மெதுவாகக் கொஞ்சதுரம் நடத்ே இருள் லேசாக விலகி வழிவிட்டு மறுபடியும் - திரண்டு கொள்வது போலிருந்தது எனக்கு. அப்பொ ழுதுதான் எதற்காக இந்தக் கும்மிருட்டில் நான் வெளியில் புறப்பட்டேன் என்ற எண்ணம் உண்டா எங்கே போவது? போய்த்தான் என்னத்தைப் பார்ப்பது? ஊளேயிடுகின்ற நாயைக் கண்டுபிடித் விடுகிறேன் என்று வைத்துக் கொள்ளலாம். பிறகு என்ன செய்வது? அதை ஏதாவது கேட்டுத் தெரிந்து கொள்ள முடியுமா? நாயுடனே பேசிக்கொண்டிருப் பதை யாராவது பார்த்துவிட்டால் என்ன நினைப் பார்களோ?-என்று இதுபோன்ற எண்ணங்கள் கிளம்பின. சே, போய்ப் பேசாமல் படுத்துக் கொள்ளலாம். சாமக்கோடங்கி போல இருட்டிலே எங்கே அலைவது என்று திரும்ப எண்ணினேன். அதுசமயம் மறுபடி யும் அதே துன்பக் குரல் அண்மையிலேயே கேட்டது. என்னல் திரும்பி வர முடியவில்லை. அந்தக் குரலில் அத்தனே அவலம் தொனித்தது. வந்தது வந்தாய் விட்டது, போய்ப் பார்த்துவிடலாம் என்று முடிவு செய்துகொண்டு வேகமாக முன் நடந்தேன். தெருக் கோடியில் ஒரு நாப் மெதுவாகப் போய்க் கொண்டிருந்தது. இருட்டில் அதிக நேரம் இருக்க இருக்கப் பொருள்களைத் தனித் தனியாகப் பார்த்து அறிந்துகொள்ள என் கண்கள் சக்தி பெற்றுவிட்டன. காலடி சததடி கேட்டு அந்த நாய் நின்று "ಪ್ಪಿತಿ திரும்பிப் பார்த்தது. அதன் கண்கள் மின்னின. ஆளுல் அது வழக்கத்திற்கு மாருகக் குரைக்காமல் இருந்தது. ஊம்... என்று மெதுவாகக் குரல் கோடுத்துவிட்டு அப்படியே ஒரு பக்கமாக நின்று !ே--இ.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/147&oldid=825065" இலிருந்து மீள்விக்கப்பட்டது