பக்கம்:பிள்ளை வரம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i4 பிள்ளை வரம் பார்த்தது போதும்' என்று முருகன் வெறுப்புடன் பேசலாஞன். - அவனது ஒவியசாலைக்குக் கம்பியில்லாத சாளரம் ஒன்று உண்டு! வீட்டின் பின் பாகத்தை நோக்கி யிருந்தது அது. இப்பொழுது அதன் வழியாகத்தான் அவனுக்கு உணவு வருகிறது: ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட வேளைகளில் உணவேந்திய ஒரு கை சாளரத்தின் வழியே தென்படும். முருகனும் அவன் o, , o, ... * * * - -གནསསྩལ་ ༩ மகிழ்த்த படமும் யாதோரு தடங்கலும் இன்றி ஏகாந்தமாக இருந்தனர்! முருகனுக்குப் படத்தின்மீது ஏற்பட்ட ஆசை தாவித் தாவி வளர்ந்தது. சிறிது நேரமும் அதை விட்டுப் பிரிய அவளுல் முடிவதில்லை. எப்பொழுதும் அதைப் பார்த்து மகிழ்ந்துகொண்டிருந்தான். புது ஒவியங்கள் தீட்டுவது, நண்பர்களுடன் அளவளாவு வது, தன் உடலேக் கவனிப்பது-எல்லாவற்றையும் மறந்துவிட்டான். அந்தக் கன்னியழகொன்றே அவன் உள்ளத்தை முற்றிலும் கவர்ந்திருந்தது. "இந்த அழகை அழியா அழகாகச் செய்துவிட்டேன்’ என்று வெறி பிடித்தவன்போலச் சொல்லுவான்; படத்தைப் பார்ப்பான். அந்த மோகனச் சிரிப்பு அவனை எதிர்கொள்ளும். அவன் அப்படியே சொக்கிப் போவான். மற்றுமோர் ஆண்டு இவ்வாறு கழிந்தது! முருக னுக்குச் சித்தப்பிரமை என்ற வதந்தி எங்கும் பர்வ லாயிற்று. "சிறந்த ஒவியன், பாவம்! இப்படி ஆகி விட்டது” என்று பலரும் பேசலானர்கள். ஆஇல் அவனுக்கு ஒவியப் பயித்தியம் என்று யாரும் தெரிந்துகொள்ளவில்லை; உடலைப்பற்றிச் சிறிதும் கவலே கொள்ளாதிருந்த்தால் அவன் நலிவடைந்து குலேந்தான்; இருமல் அடிக்கடி வரத் தொடங்கிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/15&oldid=825068" இலிருந்து மீள்விக்கப்பட்டது