பக்கம்:பிள்ளை வரம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமி தரிசனம் 39 aar *ణాజe:్కہ கடுமையான காய்ச்சல், உடம்பில் கை வைக்க முடியவில்லை. இரவெல்லாம் அவன் என்னென்னவோ உளறி . ஞன். காய்ச்சலின் வேகம் அவளுல் தாங்க முடிய வில்லை. (தலை சுழன்றது; மூளை கலங்கிற்று. ஆளுல் திருகு கொம்பனைப் பற்றிய நினைவு மட்டும் அவனுக்கு மாறவில்லை) "செம்பட்டை, ஐயோ! அலருதே, அலருதே! உன்னை வெட்டி விட்டாங் - களா? நீ சொர்க்கத்திலே இருக்கிருயா? கறுப்பண்ண சாமி பேசவே மாட்டேங்குதே. அது சாமி இல்லை; கல்லு; வெறுங் கல்லு' என்று என்னென்னவோ பிதற்றிக்கொண்டே இருந்தான். மறுநாட் காலையில் இந்தக் கதறல் மாறி விட்டது. வீரன் முகத்திலே ஒரு தெளிவு பிறந்தது. அவனுடைய ஆசை நிறைவேறிவிட்டது போல் தோன்றிற்று. அவன் ஆனந்தமாகச் சிரித்தான். எதையோ பார்த்துப் பரவசமடைந்தான். 'சாமி, எனக்குத் தரிசனங் கொடுத்தியா? எனக்கும் சொர்க்கங் கொடு” என்று தழுதழுத்த குரலில் அவன் கெஞ்சின்ை. திருகு கொம்புச் செம்பட்டை. அவனுக்குக் காட்சி :ளித்தது. அதன் முகத்தில் என்றுமில்லாத ஒர் ஒளி இருந்தது. சாகும்போது அதன் கண்ணிலிருந்த மருண்ட பார்வை போய் இப்போது சாந்தி பொங்கிற்று. அது அன்போடு தெய்விகக் குரலில் தன்னை அழைப்பதாக வீரன் உணர்ந்தான். "நீதான் சாமி, அந்தக் கல்லு சாமி யில்லை. நீ தான் எனக்குச் சொர்க்கங் கொடுக்கும் சாமி” என்று அவன் உதிடுகள் அசைந்தன. அவன் ஆவி பிரிந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/40&oldid=825122" இலிருந்து மீள்விக்கப்பட்டது