பக்கம்:பிள்ளை வரம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 ឳងៃ 2, Qវអ្វីមំ ་མ་བྱ་བ་ கந்தப்பனுக்குப் போதை தெளிவதற்குள் இருட்டிவிட்டது. முதலில் எங்கிருக்கிருேமென்றே அவ்னுக்குத் தெரியவில்லை. பிறகு கொஞ்சங் கொஞ்ச மாக நடந்தவையெல்லாம் நினைவிற்கு வந்தன. "வாக்குத் தவறினதுமல்லாமல், வேலாயிக்குத் தெரியும்படி நடந்துகொண்டேனே! பாரிடத்திவா வது அவளிடம் கொடுக்கும்படி இரண்டு ரூபாயை முதலிலேயே கொடுத்திருக்க வேண்டும்” என்று பல வாறு நினைத்துக் கலங்கினன். அப்பொழுதுதான். அவனுக்குத் தான் கொண்டுபோன ரூபாயைப் பற்றிய எண்ணம் வந்தது. மடியைத் தொட்டுப் பார்த்தான். பையைக் காணவில்லை. சந்தையில் ஒரு செலவும் வாங்காமல் வேலாயி வெறுங்கூடையுடன் வீட்டுக்கு வந்தாள். அடே அம்மா வந்துட்டா, அம்மா! முட்டாயி’ என்று சத்தம் போட்டுக்கொண்டு சிறுவர்கள் ஒடி வந்தாாகன. - கந்தப்பனுக்கு இதைக் கேட்கப் பொறுக்க முடியவில்லை. வேலாயியிடம் நடந்ததை ஒளிக்க அவன் இப்பொழுது கருதாமல் தனது மன்த்தைக் கலைத்த கள்ளுக்கடையை ஒரு சிலந்திக் கூடு என மனத்திற்குள்ளேயே அதைச் சபிக்கலாஞன். அதே சமயத்தில் வேலாயியின் வாடிய கண்கள் அவன் கண்களைச் சந்தித்தன. "ஐயோ! கடையை மறு படியும் திறந்துவிட்டு என் புத்தியைக் கெடுத்து விட்டார்களே! கடையில்லாவிட்டால் நான் புத்தி கெட்டுப் போயிருக்க மாட்டேனே!” என்று அவன் கதறினன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/57&oldid=825140" இலிருந்து மீள்விக்கப்பட்டது