பக்கம்:பிள்ளை வரம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரே தடவை 95 சுருக்கமாகச் சொல்லிவிடுகிறேன். அவர் அன்று எடுத்துச் சென்ற 500 ரூபாபையும் தோற்றுவிட்டு டு 寄

ஒர் * {

ご以" 爱 வரும்போது அவருக்கு எந்த விதமான உணர்ச்சி پلاسم చ * ~ - * 资 χ«ξκ : 名、灾 ఈ * ية யும் இருந்ததாகத் தெரியவில்லை. பிணம் ஒன்றிற்கு நடக்க மட்டும் சக்தியிருந்தால் எவ்வாறு வருமோ அவ்வாறு வீடு வந்து சேர்ந்தார்; அப்படியே சாப். பிட்டார்; படுத்துக்கொண்டார். 曼 அவருக்கு உறக்கம் வரவில்லை. தலை கொதிக்க லாயிற்று. அவரையும் அறியாது ஒரு பெருமூச்சு நெஞ்சைப் பிளந்துகொண்டு வெளிவந்தது. ஆசையால் மோசம் போய்விட்டேனே! நாளே மத்தியான்னம் 12 மணிக்குள் விஷயம் எப்படியும் வெளியாகிவிடும். வேலே நிச்சயமாகப் போய்விடும். பிறகு குடும்பத்தின் கதி என்குவது? யாரிடமாவது கடன் வாங்கிக் கொடுத்துவிடலாமென்ருல் யார் எனக்குக் கடன் கொடுக்கப் போகிரு.ர்கள்? சம்பளம் குடும்பச் செலவுக்கே காணுது என்பதை யாரும் . ди 始 w אף 将 همبسته எளிதில் அறிந்து கொள்ளுவார்கள். ஐந்நூறு ரூபாய் கடன் கொடுத்தால் திருப்பிக் கொடுக்கச் சக்தி இருக்கிறதா என்று யோசிப்பார்களல்லவா? ஏதா வது நகையை அடகு வைத்து வாங்கலாமென்ருலோ மனைவி கழுத்தில் தாலியைத் தவிர வேறு இன்றும் இல்லையே! இனி என்ன செய்வது? வேலை போவ தோடு நாணயம் வேறு இகட்டுப்போச்சே! இப்படி யும் என் அறிவு கெட்டுப்போக வேண்டுமா? பேசா மல்(சுராஜ்மல்லின் பணத்தைக் கொடுத்துவிட்டு வந்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாவிட்டாலும் முதல் தடவை தோற்றவுடன் வந்திருக்கக்கூடாதா? ஒரு தடவை தவறிலுைம் இன்னுெரு தடவையாவது பவித்துவிடும் என்று மேலும் மேலும் கட்டி எல்லாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/96&oldid=825183" இலிருந்து மீள்விக்கப்பட்டது