பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் #39

ஒரு சந்தர்ப்பத்தை அவர் மறக்கவே முடிந்ததில்லை.

அவர் வீட்டினுள்ளிருந்துவெளியே வந்து கொண்டி ருந்தார். செல்லம்மா தெருவாசலில் நின்றுவிட்டு உள்ளே வந்தாள். ஒரு சுவர்த்திருப்பம். அந்த இடத்தில் இரண்டு பேரும் மோதிக்கொள்வதுபோல், எதிரும் புதிருமாக, நெருங்க நேர்ந்துவிட்டது. தற்செயல் நிகழ்ச்சி. அந்தப் பெண் ணின் நெருக்கமும், மிக அருகிலிருந்த முகமும் சிரிக்கும் இதழ்கள், பட்படத்த கண்கள், மினு மினுத்த கன்னங்கள் எல்லாமும் கழுத்தும், அங்கு அழகாய் துவண்ட மெல்லிய தங்கச் சங்கிலியும் அதன் டாலர் தொங்கிய இடத்தில் இருபுறமும் விம்மி நின்ற சதைத்திரட்சிகளும் குளோலப் காட்சியாய் அவரைத் தாக்கின. அவளிடமிருந்த பரவிய இனிய வாசனை அவரைக் கிறக்கியது. அவள் விலகாமல்விலகிக் கொள்ள அவசரம் காட்டாமல் - அவரையே பார்த்துக் கொண்டு நின்றாள். அவருக்கு அவர்தான் பெருத்த தவறைச் செய்து கொண்டிருப்பதுபோன்ற பதைப்பு. சட்டென விலகினார். அவள் சிறிது அசைந்ததனால் அவள் சேலைத் தலைப்பு அவர் கையில் பட்டுப் படிந்தது. அவர் திரும்பிக் கூடப் பார்க்காமல் வேகமாக நடந்து விட்டார்.

“மடத்தனம். நான் மடத்தனமாக நடந்து கொண்டேன். சரியான மடச்சாம்பிராணி என்று பிற்காலத்தில் அவர் அதற்காகத் தன்னையே நிந்தித்துக் கொண்ட தடவைகள் பலவாகும். அந்த மாம்பழக் கன்னத்தில் டபக்கென்று ஒரு முத்தம் கொத்தியிருக்கலாமே? பழச்சுளை உதடுகளில் அவசரமாக நம் உதட்டால் வேகமாக முத்தம் பதித்திருக் கலாமே? இவ்வாறெல்லாம் அவர் மனக்குதிரை தறிகெட்டுத் தாவும். அவர் கழி விரக்கத்தோடு ‘உம். பொன்னான சந்தர்ப்பத்தை நழுவவிட்டுவிட்டேன்! என்று எண்ணுவார்.

மறுநாள் அவள் ஐ லவ் யூ என்று ஒரு தாளில் எழுதி, புத்தகத்தினுள் வைத்து அவரிடம் கொடுத்தாள். பயந்தாங்