பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 4

இப்பொழுதும் அவர் மனம் வீணத்தனம் தான் செய்தது. எப்பவோ ஒரு வருஷத்தில், எங்கோ ஒரு ஊரில் நிகழ்ந்த ஒரு உணர்ச்சி நாடகத்தை இப்போது அவரது மன அரங்கில் நிழலாட்டமாகக் கொண்டுவந்து இயக்கியது அது.

நண்பர் ஒருவரின் அழைப்புக்கு இணங்கி அவர் அந்த ஊருக்குச் சென்றிருந்தார். சில தினங்கள் அங்கே தங்கி யிருந்தார். அவருக்கு வசதிகள் எல்லாம் செய்த தரப்பட்டி ருந்தன. தனி அறை, படிக்கப் புத்தகங்கள் எல்லாம்தான். அவர் காற்றோட்டமுள்ள வராந்தாவில் கட்டிலில் படுத்துக் துங்குவது வழக்கம். ஒருநாள் அதிகாலையில் அவர் முகத்தின் மீது சிலீர் என்ற உணர்வு படர்ந்தது. அவர் திடுக்கிட்டுக் கண்விழித்தபோது, கட்டிலுக்கு அருகில் ஒரு இளம் பெண் நிற்பதைக் கண்டார். நன்கு விளைந்துள்ள சர்க்கரைவள்ளிக் கிழங்கு மாதிரி புஷ் டியான தோற்றம். குறுகுறுவென்று சுழலும் கண்கள். குறும்புச் சிரிப்பு. அவள் அவ்வீட்டில் அங்குமிங்கும் திரிவதையும். அவரை அடிக்கடி பார்வையால் விழுங்குவதையும் அவர் கவனித்திருந்தார். இருளை ஒளி விழுங்க முயன்று கொண்டிருந்த அவ்வைகறைப் போதில், அவள் நீராடிவிட்டு ஈரத்தணியோடு வந்து நின்றாள் என்பது அவருக்குப் புரிந்தது - நன்கு பிழியப்படாத துணியில் நீர்மை நிறைந்திருந்தது. அம்மெல்லிய வெண்துகில், சதைப் பிடிப்பு மிகுந்த சிவப்பு மேனியில் அங்கு மிங்கும் ஒட்டிக்கொண்டு அவளது உடல் வளப்பத்தை நாசூக்காக விளம்பரப் படுத்தியது. அவள் சீலையின் முந்தானைதான் அவர் முகத்தை வருடியிருக்கவேண்டும். அவள் சீலையில் ஈரம் கசிந்து நீர் சொட்டிக் கொண்டிருந்தது போலவே, அவள் மனசிலும் உணர்வுக் கசிவு ஏற்பட்டிருந்தது போலும் ஆசை அவர் பக்கம் சொட்டிக்கொண்டிருந்தது போலும் அவள் பேசாத உணர்ச்சியை அவளுட்ைய பார்வை தெளிவாகத் பேசிக் கொண்டிருந்தது. அவர் அவள் உடலையும் முகத்தையும்