பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 புண்ணியம் ஆம் பாவம்போம்!

இழுத்துக்கிட்டே, மூச்சைப் புடிச்சு வச்சுக்கிட்டே, இருந்து துன்னு சொன்னா நாம எத்தனை நாளைக்குக் கொட்டி அழமுடியும்?

பிறகு, செத்ததும் சாவு செலவுகளுக்கெல்லாம் நம்ம கிட்டே எங்கே இருக்கு? எழவு கேட்டு வாறேன். துக்கம் விசாரிக்க வாறோம்னு இருந்தான் குடியா எல்லாரும் வருவாங்க. யாருக்கு ஆவி இருக்கு? இல்லை, வாறவங்க போறவங்களுக்கெல்லாம் வெந்து தட்ட யார் கிட்டே ஐவேசு இருக்கு? இவருக்கென்ன, இவரு பெரிய கலெக்டர்துரை, உடம்பிலே புடியாமே சொல்லிட்டாரே, இருந்துட்டுப் போட்டுமே; இப்ப என்ன கெட்டுப்போச்சுன்னா... ஹே! எதையும் எட்டி யோசிக்க வேணாம்?...”

இந்த ரீதியில், ஒயாது அழுது எரிச்சலூட்டும் மழை மாதிரி மீனாட்சி புழுபுழுத்தாள்; புலம்பிக் கொண்டே யிருந்தாள். . .

எரிச்சல் பொறுக்க மாட்டாது சிதம்பரம் வள்ளென விழுந்தான். இப்ப என்ன செய்யனும் கே? கிழத்தை வெளியே இழுத்துப் போடணும்.கிறியா? என்றான். நான் சொன்னா உடனே நீங்க செஞ்ருவீக பெரிய மன்னபிலி தான். எங்க மன்னபுலியை, யேயம்மா, மாடு கண்டா விட்டிருமான் னாளாம் ஒருத்தி என்று கெண்டை பண்ணினாள் அவள்.

இவ்வாறு மொணமொனத்தும், குத்திப் பேசியும், பேச்சால் அரித்தும், அவள் அவன் மனசைக் கரைத்து விட்டாள்.

கிழவர் அந்த வீட்டுக்கு வந்து மூன்று நாட்களாகி விட்டன. அவர் வந்ததும் வெளியே பெய்யத் தொடங்கிய மழை விடாது ஆட்சி புரிந்தது. சாடி மோதும் ஒரு கணம். சோவெனப் பொழியும் சில நேரம். தொணதொணப்பனின்