பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 புண்ணியம் ஆம் பாவம்போம்:

திண்னை சற்று அகலமானது. பாதுகாப்பாகக் கம்பி அழி இடப்பட்டிருந்தது. என்றாலும் காற்றுக்குப் பாதுகாப் பானது அல்ல. மழை வலுவாய் பெய்தால் உள்ளே சாரலடிக்கும்.

அதை எல்லாம் பற்றி மீனாட்சி கலைப்படவில்லை. கிழவரை சுவர் ஒரமாகக் கிடத்திவிட்டு இருவரும் உள்ளே போய் கதவைத் தாளிட்டுக் கொண்டார்கள். கிழடுக்கு நல்ல மனசு இல்லை. வாய்தான விளங்காமல் போயிட்டுதே தவிர, கண்ணும் காதும் கூர்மையாகத்தான் இருக்கு. தன்னாலே நல்லபடியா உண்ணத் தின்ன முடியலியே, மத்தவங்க எல்லாரு இஷ்டம்போல் தின்கறாங்களேன்னு ஏக்கமும் வயித் தெரிச்சலும் அதுக்கு இருக்கு. அது பார்க்கிற பார்வை யிலேயே அது மனசுதான் தெரியுதே. அப்புறம் யாரு என்ன பேசுறா, ஏது சொல்லுறான்னு சதாகாது கொடுத்துக் கேட்டுக் கிட்டே இருக்கு. வயிறு எரிஞ்சு கெடு நினைப்பு நினைக்கும். அது நம்ம குடும்பத்துக்கு ஆகாது. கிழடு திண்ணையிலேயே படுத்துக் கிடக்கட்டும். அது நல்ல இடம். வசதியாகத் தானிருக்கு என்று அவள் உறுதியாக அறிவித்தாள்.

. அது சரிதான் என்றான் சிதம்பரம். அவர்கள் நிம்மதி

யாக உறங்கத் தொடங்கினார்கள். -

பாம்பு மாதிரிச் சீறி நெளிந்து கொண்டிருந்த வாடைக் காற்று வலுத்தது. குடிகாரனைப் போல் வெறித்தனமாய் இரைச்சலிட்டுச் சுற்றிச் சுழன்றது. எங்கும் மோதியது. திறந்த இடங்களில் புகுந்து சாடியது. கனமேற்று விட்ட பெருந் துறலைக் கண்டபடி அலைக்கழித்தது.

குளிர்காற்றும் மழை நீரும் கிழவர் கிடந்த திண்ணையில் புகுந்து உற்சாகமாக விளையாடின. .

கிழவர் மீது தண்ணிர் படவில்லை. எனினும் குளிர் அவரை உலுக்கி எடுத்தது. மழையும் காற்றும் இன்னும்