பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 16

யோகத்தை அடைவது? படிப்பு எனும் ரேஸ் குதிரை அவரைக் கீழே தள்ளிவிட்டது.

அத்தியாவசியச் செலவுகளையும் குடும்பத் தேவை களையும் சரிக்கட்டுவதற்காக அவர் என்னென்னவோ பண்ண வேண்டியிருந்தது. சிலரது விவகாரங்களையும் விவசாயத் தையும் மேல் பார்த்தல் (மேனேஜ் பண்ணுவது). கல்யாணத் தரகு, நிலவிற்பனை புரோக்கர் தொழில் முதலிய பலரகக் கமிஷன் வேலைகள் - இப்படி எத்தனையோ இழுத்துப் போட்டுக் கொண்டு ஓடி ஆடி உழைத்தார் அவர். அவரே அடிக்கடி சொல்லிக் கொண்டது போல, ஆனையைத் தூக்கிப் பானையிலே போட்டு, பானையைத் தூக்கி அடுப்பிலே போட்டு, ஊரை அடிச்சு உலையிலே கொட்டி, என்னென்னவோ திருகுதாமெல்லாம் பண்ணி ஒரு தினுசாகக் காலம் கழித்து வந்தார்.

இப்படி எவ்வளவு காலம் வாழ முடியும் 2 வயசும் ஆகிவிட்டது. முதுமைப் பருவத்திலாவது கொஞ்ச்ம் விட் டாத்தியாக இருக்க வேண்டாமா? கவலையற்று, ஹாயாகக் காலம் கழிப்பதற்கு இப்போதும் பிள்ளை ஒரு பந்தயக் குதிரையைத் தான் நம்பினார். அது அவருடைய புத்திர பாக்கியம் செல்லையாதான். -

‘செல்லையா நல்லாப் படிச்சு, பரீட்சை எல்லாம் பாஸ் பண்ணி, மேல் படிப்புப் படித்து, பெரிய உத்தியோகத்துக்குப் போகணும். என்ஜினிரு, டாக்டரு இப்படி என்னென்னவோ சொல்றாங்க. ஒவ்வொருத்தன் ரெண்டு கையாலேயும் அத்துப் புடுங்கிக் கிட்டு வாறான். மோட்டாரு சைக்கிளுங் கிறான், காரு இங்கிறான். வீடு இங்கிறான், பாங்கிலே பணம்கிறான்... ஆங்! நம்ம செல்லையாவும் ஏன் அப்படி வராப்படாதுங்கேன்? அது மாதிரி உசந்தாச்சுதுன்னு சொன்னா, பொண்ணு வீட்டுக்காரனுக விழுந்தடிச்சு வரமாட்